ஜோதிடத்தின் படி கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றுவதன் மூலம் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகின்றது. 

அந்தவகையில், நவகிரகங்களின் தலைவனாகக் கருதப்படும் சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசி மாறுவார். தேவர்களின் குருவான குரு பகவான் ஆண்டுக்கு ஒருமுறை ராசி மாறுவார்.

சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? | Guruaditya Rajyog After 12 Years Who Get Huge Luck

தற்போது தனது உச்ச ராசியான கடகத்தில் பயணித்து வரும் குரு பகவானுடன், ஜூலை 16 அன்று சூரியனும் கடக ராசியில் இணைகிறார்.இந்த சேர்க்கையால் மங்களகரமான குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகி, ஆகஸ்ட் 17 வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருந்தாலும், சில ராசிக்காரர்கள் செல்வம், முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்ட பலன்களை அதிகமாக பெறவுள்ளனர். அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? | Guruaditya Rajyog After 12 Years Who Get Huge Luck

 

மேஷ ராசியின் 4-வது வீட்டில் குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதன் தாக்கத்தால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் ஏற்படப்போகின்றது.

திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதால், நீண்ட நாட்களாக இருந்த பொருளாதார சிக்கல்கள் நீங்கி பணவரவு அதிகரிக்கும்.

வேலை மற்றும் தொழில் தொடர்பாக மேற்கொள்ளும் நீண்ட தூர பயணங்கள் புதிய வாய்ப்புகளையும் நல்ல வருமானத்தையும் ஏற்படுத்திக்கொடுக்கும்.

அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைத்து, எடுத்த முயற்சிகளில் வெற்றி எளிதில் கிடைக்கும். பணியில் இருப்பவர்கள் தங்களின் கடின உழைப்பிற்கான அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெறுவார்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். 

மிதுனம்

சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? | Guruaditya Rajyog After 12 Years Who Get Huge Luck

மிதுன ராசியின் 2-வது வீட்டில் குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தப்போகின்றது.

குறிப்பாக நிதி நிலைமை மேம்பட்டு, வருமானத்தை அதிகரிக்கும் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். எந்த ஒரு பணியையும் திட்டமிட்டு செயல்படுத்துவதன் மூலம் நல்ல வெற்றியை அடைய முடியும்.

தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும். மாணவர்கள் போட்டித் தேர்வுகள் மற்றும் கல்வி சார்ந்த முயற்சிகளில் சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள்.சமூகத்தில் மதிப்பு, மரியாதை மற்றும் கௌரவம் உயரக்கூடும்.

சிம்மம்

சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? | Guruaditya Rajyog After 12 Years Who Get Huge Luck

சிம்ம ராசியின் 12-வது வீட்டில் குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதன் காரணமாக இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல புதிய அனுபவங்களும் மாற்றங்களும் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவி, உறவுகளில் நல்லிணக்கம் அதிகரிக்கும்.

நிதி நிலைமை வலுவடையக்கூடும். எதிர்பாராத வழிகளில் பணவரவு கிடைக்கும் வாய்ப்பும், நீண்ட நாட்களாக இருந்த கடன் அல்லது பொருளாதார சுமைகள் குறையும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

வாழ்க்கைத் துணையுடனான உறவு மேலும் வலுப்பெறும். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வமும் வாய்ப்புகளும் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்த்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.