ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, காதல் வாழ்க்கை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியாக தாக்கத்தை கொண்டிருக்கும் என நம்ப்படுகின்றது.
அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள், இயல்பாகவே யாருக்கும் கட்டுப்படாத ஆளுமை கொண்டவர்களாக அறியப்பபடுகின்றார்கள். இவர்கள் தங்களின் நிலையில் இருந்து யாருக்காகவும் இறங்கிவர மாட்டார்களாம்.
அப்படி தங்களின் எல்லைக்குள் யாரையும் அனுமதிக்காது, யாருக்கும் அடங்காமல் வாழும் ராசியினர் யார் யார் என அந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
கிரகங்களின் தளபதியான செவ்வாயின் ஆதிக்த்தில் பிறப்பெடுத்த மேஷ ராசியினர் இயல்பாகவே அச்சமற்ற தன்மைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் இருக்கும் இடத்தில், இவர்கள் தான் ராஜாவாக இருக்க வேண்டும் என்பதில் எப்போதும் உறுதியாக இருப்பார்கள்.
இவர்கள் எப்போதும் மற்றவர்களை வழிநடத்த விரும்புவாதால் இயல்பாகவே யாரும் தங்களை கட்டுப்படுத்த அனுமதிக்க மாட்மார்கள். தங்களின் நெருங்கிய உறவுகளை கூட அடக்கியாளும் குணம் அவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
கும்பம்
சனிபகவானின் ஆதிக்கத்தில் பிறப்பெடுத்த கும்ப ராசியினர், வாழ்வில் நீதிக்கும் நேர்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் வாழ்வில் எல்லாவற்றுக்கும் மேலாக தங்களின் சுதந்திரத்தை மதிப்பவர்களாக இருப்பார்கள். யாருக்காகவும் தங்களின் சுதந்திரத்தை மட்டும் ஒருபோதும் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள்.
தங்களை கட்டுப்படுத்தும் எதையும் யாரையும் இவர்கள் கிட்டவே நெருங்கவிடமாட்டார்கள். மொத்தில் இவர்களை கட்டுக்குள் வைப்பது நடக்காத காரியம்.
விருச்சிகம்
போர் கிரகமான செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த விருச்சிக ராசியினர், இயல்பாகவே மர்மமான இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் நோக்கத்திலும், தங்களின் எதிர்கால இலக்கிலும் தெளிவாக இருப்பதால், யாருக்கும் எளிதில் வளைந்து கொடுக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ மாட்டார்கள்.
இவர்களை யாராவது கட்டுப்படுத்த முயன்றால், அது எந்த உறவாக இருந்தாலும் அதை முறித்துக்கொள்ள துளியும் தயங்கவே மாட்டார்கள்.