தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருக்கும் அதர்வா நடிப்பில் உருவாகி கடந்த 10-ஆம் தேதி வெளியான திரைப்படம்தான் இதயம் முரளி.
இப்படத்தை அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி, தயாரித்துள்ளார். இப்படத்தில் அதர்வாவுடன் இணைந்து ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், பகத் பாசில், சுதாகர், டிராவிட், ரக்ஷன் என பலரும் நடித்துள்ளனர்.

காதல் கதைக்களத்தில் உருவாகி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில், 2 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் ரூ. 8 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
