பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி, வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி, ஜூலை 11 அன்று மாலை 7.30 மணியளவில் அவர் உயிரிழந்தார்.

அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகை த்ரிஷா தனது சமூக ஊடக பக்கத்தில் பாடகி எஸ். ஜானகி மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

த்ரிஷாவின் உருக்கமான பதிவு

த்ரிஷா தனது பதிவில்,

எனது மிகச் சிறப்பான திரைப்படங்களில் ஒன்றில் உங்கள் பெயரைத் தாங்கியிருப்பது, என் வாழ்நாளின் ஆகச்சிறந்த கௌரவங்களில் ஒன்றாக என்றென்றும் திகழும்.

உங்கள் குரல் என்றென்றும் நிலைத்திருக்கும் ஜானகி அம்மா... த்ரிஷாவின் உருக்கமான பதிவு | Actress Trisha Pay Heartfelt Tribute To S Janaki

ஆனால், உங்களை அறிந்திருப்பதும், உங்கள் அன்பைப் பெற்றிருப்பதும் நான் என்றென்றும் போற்றிப் பாதுகாக்கும் ஒரு விஷயமாக இருக்கும். உங்கள் அரவணைப்பு, கனிவு, சிரிப்பு மற்றும் 'சிறந்த கலைஞர்களே மிகவும் எளிமையானவர்கள்' என்பதை எனக்கு எப்போதும் நினைவூட்டியமைக்கு நன்றி.

உங்கள் குரல் என்றென்றும் நிலைத்திருக்கும். அமைதியாகத் துயில்கொள்ளுங்கள் ஜானகி அம்மா ... என உருக்கமான பதிவுடன் ஜாகியுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களையும் த்ரிஷா பகிர்ந்துள்ளார்.