நடிகை அனிகா மாடர்ன் உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது சுடிதார் அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
நடிகை அனிகா சுரேந்திரன்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகையாக கலக்கி வருகின்றார் நடிகை அனிகா சுரேந்திரன்.
2013ம் ஆண்டில் மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா, தமிழில் 2015ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் நடித்து அசத்தினார்.

பின்பும் அஜித்துடன் விசுவாசம் படத்தில் மகளாக நடித்து அசத்தியது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. நடிப்பு மட்டுமின்றி விளம்பர படங்களிலும் நடித்து தனக்கான இடத்தினை தக்க வைத்து வருகின்றார்.
இவர் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார். குழந்தை நட்சத்திரமாக இருந்த அனிகா தற்போது 21 வயதாகும் நிலையில், புடவை, மாடர்ன் உடைகள் என அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

பெரும்பாலான நேரங்களில் மாடர்ன் உடைகளிலேயே புகைப்படங்களை பதிவிட்டு வந்த அனிகா, தற்போது சற்று வித்தியாசமாக சுடிதாரில் காணப்படுகின்றார்.
எந்தவொரு கிளாமரும் இல்லாமல் அழகான வெட்கத்துடன் சுடிதாரில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குறித்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
