அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பிடனுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன், 290 தொகுதிகளை கைப்பற்றி 46வது ஜனாதிபதியாகவும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாகவும் பதவியேற்கவுள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜோ பிடனுக்கும், துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிசுக்கும் ஏனைய நாடுகளை சேர்ந்த தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவும் ஜோ பிடனுக்கு தனது ருவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அதேபோன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹரீஸிற்கு ருவிட்டர் ஊடாக தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.