தென்னாசியாவில் அதிகளவில் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாமிடத்தை பிடித்துள்ளது.

சர்வதேச கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டாளர் அமைப்பின் புதிய அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டில் 60 வீதமானோர் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவதாக தெரிவிக்க்பபட்டது.

இந்தியாவில் இந்த எண்ணிக்கை 69 வீதமாக உள்ளது. நேபாளத்தில் 53 வீதமானோரும், பாகிஸ்தானில் 51 வீதமானோரும் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துகிறார்கள்.

தென்னாசியாவில் குறைந்தளவில் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் நாடாக பங்களாதேஷ் உள்ளது. அங்கு 41 வீதமானோர் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துகிறார்கள் என தரவுகள் காட்டுகின்றன.