இன்றைய காலத்தில் வயிற்று பகுதியில் காணப்படும் கொழுப்பினை கரைப்பதற்கு பல முயற்சிகளை மக்கள் செய்து வருகின்றனர்.
சிலர் அதற்காக பல சிகிச்சையையும் எடுத்து வருகின்றனர். உடற்பயிற்சியுடன் யோகாசனங்களை தினமும் செய்து வந்தால் வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்க முடியும்.
புஜங்காசனம்
வயிற்று தசைகளை வலுப்படுத்தி, வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்பினைக் குறைப்பதற்க உதவுகின்றது. இவை முதுகு, அடிவயிறு மற்றும் உடலின் மேற்பகுதியை வலிமையாக்குகின்றது. இதே நிலையில் 15 முதல் 30 நொடிகள் அதே நிலையில் இருக்கும்.

தனுராசனம்
உடலை வில் போன்ற வடிவத்தில் வளைத்து செய்யப்படும் ஆசனமாகும். இவை வயிறு மற்றும் தொடைப்பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைக்கின்றது.
செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.

நாகாசனம்
இடுப்பை சுற்றியுள்ள கொழுப்புகளை கரைத்து தட்டையான வயிற்றை பெற உதவுகின்றது. இவை முதுகு மற்றும் கால்தசைகளை வலுப்படுத்துகிறது.

பவனமுக்தாசனம்
குடலுக்கு மசாஜ் செய்தது போன்ற பலனை அளிக்கின்றது. இவை செரிமானத்தினை சீராக்கி மலச்சிகலைத் தடுத்து, வளர்சிதை மாற்றத்தினை அதிகரிக்கின்றது.
அதுமட்டுமின்றி அடிவயிறு, தொடை மற்றும் இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பையும் குறைக்கின்றது.
யோகா தொப்பையைக் குறைப்பதற்காக மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது. மேலும் மன அழுத்தத்தினையும் குறைக்கின்றது.

தொப்பையைக் குறைத்து ஸ்லிம்மாக இருக்க வேண்டுமானால், யோகாவுடன் சேர்த்து சத்தான உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதாவது 30 நிமிட நடைபயிற்சி மற்றும் தண்ணீர் குடிப்பது, சீரான தூக்கம் இவை கட்டாயம் இருக்க வேண்டும்.
