உலகம் முழுவதும் 213 நாடுகள்/பிரதேசங்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், கொரோனாவால் ஏற்படும் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 40 ஆயிரத்தை கடந்தது. தற்போதைய நிலவரப்படி, 53 லட்சத்து 23 ஆயிரத்து 639 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 28 லட்சத்து 11 ஆயிரத்து 690 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 44 ஆயிரத்து 589 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 21 லட்சத்தை கடந்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 40 ஆயிரத்து 323 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-
- அமெரிக்கா - 97,655
- பிரேசில் - 21,116
- ஸ்பெயின் - 28,628
- இங்கிலாந்து - 36,393
- இத்தாலி - 32,616
- பிரான்ஸ் - 28,289
- ஜெர்மனி - 8,352
- ஈரான் - 7,300
- கனடா - 6,250
- மெக்சிகோ - 6,989
- பெல்ஜியம் - 9,237
- நெதர்லாந்து - 5,788