நடிகை குஷ்பு - சுந்தர்.சி தம்பதியின் இளைய மகள் அனந்திதா, சமீபத்திய நேர்காணலில் தனது உடல் எடை குறைப்பு மற்றும் சமூக வலைதள விமர்சனங்கள் குறித்து பேசியுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அனந்திதா பேட்டி

குறித்த பேட்டியில் அவர் குறிப்பிடுகையில், தான் திடீரென உடல் எடை குறைக்கவில்லை என்றும், 2018 முதல் தொடர்ந்து முயற்சி செய்து சுமார் 7 ஆண்டுகளில் இந்த மாற்றத்தை அடைந்ததாகவும் கூறினார்.

திருநங்கை போல் இருக்கேனா? கிண்டல் செய்தவர்களுக்கு குஷ்பு மகள் நெத்தியடி பதில்! | Kushboo Daughter Reply Transgender Controversy

அறுவை சிகிச்சை அல்லது Ozempic மருந்து பயன்படுத்தியதாக கூறப்படும் வதந்திகளை அவர் மறுத்துள்ளதுடன், தனது தோற்றம் குறித்து அவதூறாக பேசியவர்களை விமர்சித்த அவர், பெற்றோர் பிரபலங்கள் என்பதற்காக தன்னை இழிவுபடுத்த யாருக்கும் உரிமை இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

திருநங்கை போல் இருக்கேனா? கிண்டல் செய்தவர்களுக்கு குஷ்பு மகள் நெத்தியடி பதில்! | Kushboo Daughter Reply Transgender Controversy

தன்னை "திருநங்கை" என கிண்டல் செய்தவர்களுக்கு பதிலளித்த அனந்திதா, திருநங்கைகள் அழகானவர்களும் மரியாதைக்குரியவர்களும் என்றும், அந்த வார்த்தையை இழிவாக பயன்படுத்துவது அதைச் சொல்பவர்களின் பாரபட்ச மனப்பான்மையையே காட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளார். குறித்த பேட்டி தற்போது இணையத்தில் பெரும்பாலோரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.   

திருநங்கை போல் இருக்கேனா? கிண்டல் செய்தவர்களுக்கு குஷ்பு மகள் நெத்தியடி பதில்! | Kushboo Daughter Reply Transgender Controversy