சஞ்சிதா உகாலே
இந்தியில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை சஞ்சிதா உகாலே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சஞ்சிதா உகாலே சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் மிகவும் பிரபலமானவர். வெப் தொடர்கள் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்து வந்துள்ளார். பாலிவுட் திரையுலகில் நடிகர் விக்கி கவுஷால் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற சாவா திரைப்படத்தில் நடிகை சஞ்சிதா உகாலே நடித்திருந்தார்.

இந்த நிலையில், மும்பையில் உள்ள தனது வீட்டில் நடிகை சஞ்சிதா சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். தந்தை மற்றும் சகோதரியுடன் வசித்து வந்த இவர், வீட்டில் ஆள் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்றுள்ளனர். தற்போது இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், நடிகை சஞ்சிதா உகாலே தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் இதுவரை எதுவும் வெளிவரவில்லை.

ஜூன் 14
நடிகை சஞ்சிதாவின் மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்கள் தங்களது இரங்கலை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். சஞ்சிதா தற்கொலை செய்துகொண்ட தினம் கடந்த ஜூன் 14ஆம் 2026. இதே நாளில் 6 ஆண்டுகளுக்கு முன் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த இரண்டு சம்பவங்களும் ஒரே தேதியில் நடந்துள்ள நிலையில், சஞ்சிதா உகாலேவின் சகோதரர் ஆகாஷ், இந்த இரண்டு சம்பவங்களையும் தொடர்புபடுத்தி பேசியுள்ளார். அதில், "சுஷாந்த் சிங் ராஜ்புட் 2020ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி அங்கு தற்கொலை செய்துகொண்டார். ஏன்? ஏனென்றால், பாலிவுட் அவர் மீது மிகுந்த அழுத்தத்தை கொடுத்தது. அந்த அழுத்தத்தின் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டார். அதேபோல் தான் நேற்று என் சகோதரியும் இதே காரணத்திற்காக தற்கொலை செய்துகொண்டார்" என கூறியுள்ளார்.

