ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறார். அதனால், சூரியனின் ராசி மாற்றங்கள் ஜோதிட ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.
2026 ஜூன் 15 ஆம் தேதி சூரியன் மிதுன ராசிக்குள் பிரவேசிக்கிறார். கிரகங்களின் இளவரசரான புதன் ஆட்சி செய்யும் மிதுன ராசியில் சூரியன் நுழைவது, தகவல் தொடர்பு, கல்வி, உறவுகள், வணிக வளர்ச்சி மற்றும் அறிவுத்திறன் மேம்பாடு போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க ஆற்றல் மாற்றத்தை ஏற்படுத்தும்.
சூரியனின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும், சில ராசிக்காரர்கள் இந்த கிரகப் பெயர்ச்சியால் அதிகளவிலான நன்மைகளைப் பெறக்கூடும்.
குறிப்பாக, அவர்களின் ஆளுமை, தன்னம்பிக்கை, ஆர்வம் மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க சாதக பலன்களை அனுபவிக்கப்போகின்றார்கள். அப்படி தொழில், கல்வி, நிதிநிலை ஆகியவற்றில் உச்சகட்ட சாதக பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்காலாம்.
மிதுனம்

சூரியன் மிதுன ராசியில் பெயர்ச்சி அடைவதால், இந்த ராசிக்காரர்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். சூரியனின் அருளால் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் மீண்டும் தொடங்கும் வாய்ப்பு உள்ளது.
கடின உழைப்புக்கேற்ற பலன்கள் கிடைப்பதுடன், தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் லாபமும் ஏற்படும்.மேலும், புதிய வாய்ப்புகள் அவர்களைத் தேடி வரும்.
துலாம்

சூரியனின் இந்த ராசி மாற்றம் துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும்.வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உருவாகும்.பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைப்பதுடன், மதிப்பும் மரியாதையும் உயரும். தங்களின் முயற்சி மற்றும் திறமையால் பொருளாதார முன்னேற்றத்தை அடைவார்கள்.வாழ்க்கைத் துணையுடன் உள்ள உறவு மேலும் வலுப்பெற்று, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும்.
கும்பம்

சூரியன் பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையும் திறமையும் அதிகரிக்கும்.இதனால் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் அதிர்ஷ்டம் துணையாக இருந்து வெற்றியைத் தேடித்தரும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் படிப்படியாக தீர்ந்து, மனநிம்மதி கிடைக்கும்.
மேலும், பல்வேறு பணிகளை உற்சாகத்துடனும் திறமையுடனும் நிறைவேற்றும் ஆற்றல் அதிகரிக்கும். நிதி நிலையில் இது வரையில் இல்லாத அளவுக்கு ஏற்றம் உண்டாகும்.
