பொதுவாக தற்போது எமது சமூகத்தில் சந்திக்கும் பலரிடம் வாய் துர்நாற்றம் பிரச்சினையை அவதானிப்போம். 

சில சமயங்களில் வாய் துர்நாற்றம் பிரச்சினை எமக்கு அல்லது எம்மை சார்ந்தவர்களுக்கு இருக்கும். இதனால் நம்மாள் அவர்களிடம் சரியானதொரு உரையாடலை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.

நாம் அணியும் ஆடை நன்றாக இருந்தாலும் சுவாசம் துர்நாற்றம் வீசினால், உழைப்பு அனைத்தையும் கெடுத்துவிடும். இதனால் பொது இடங்களில் மற்றவர்கள் உங்களிடம் அமர்ந்து பேச கூட விரும்பமாட்டார்கள்.

இது போன்ற ஒரு சூழ்நிலை காரணமாக பேசுவதில் சங்கடத்தை அனுபவிக்கிறீர்கள் என்றால் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம்.

அந்த வகையில், வாய் துர்நாற்றம் பிரச்சினையுள்ளவர்கள் அதனை வீட்டில் இருந்தப்படி எவ்வாறு சரிச் செய்வது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.     

1. வாய் துர்நாற்றம் பிரச்சினையுள்ளவர்கள் தினமும் ஒரு ஏலக்காய் மென்று சாப்பிட வேண்டும். அதிலும் குறிப்பாக வெங்காயம், பூண்டு சாப்பிட்ட பின்னர் ஏலக்காய் ஒன்று கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.

வாய் துர்நாற்றம் பிரச்சினையால் அவஸ்தையா? உடனே தீர்வு கொடுக்கும் வீட்டு வைத்தியம் | How To Stop Smelly Breath2. சமைலறையில் இருக்கும் முக்கிய பொருட்களில் ஒன்றான பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிட வேண்டும். இது மோசமான செரிமான பிரச்சினையை கூட சரிச் செய்யும். தினமும் சாப்பிட்ட பின்னர் இரண்டு முறை அரை டீஸ்பூன் பெருஞ்சீரகத்தை எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும்.

3. கடுகு எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து வாயில் இருக்கும் ஈறுகளை மசாஜ் செய்தால் ஈறுகள் ஆரோக்கியமாக இருப்பதுடன் வாய்துர்நாற்றம் வருவதும் குறைவாக இருக்கும். இதனை எமது முன்னோர்கள் அடிக்கடி செய்வார்கள்.

வாய் துர்நாற்றம் பிரச்சினையால் அவஸ்தையா? உடனே தீர்வு கொடுக்கும் வீட்டு வைத்தியம் | How To Stop Smelly Breath4. எலுமிச்சை உடல் எடையை குறைக்க உதவும் என்பது உண்மை தான். அதிலும் பார்க்க வாய் துர்நாற்றத்தை கட்டுக்குள் வைக்கும். 1 கிளாஸ் தண்ணீரில் 1 எலுமிச்சையை பிழந்து தினமும் காலையில் குடித்து வந்தால் வாய் துர்நாற்றம் பிரச்சினை சரியாகும். ஏனெனின் பாக்டீரியா தொற்று காரணமாகவே இது போன்ற பிரச்சினை வரும். இவற்றை எலுமிச்சைப்பழம் சரிச் செய்கிறது.

5. நாக்கில் இருக்கும் வெள்ளைப் படலம் வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். எனவே தினமும் பல் துலக்கும் பொழுது பற்களுடன் சேர்த்து நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும்.