ஜோதிடத்தில் எந்த ராசியில் பிறந்தவர்கள் அனைவரையும் மயக்கும் வசீகரத்தை கொண்டுள்ளனர் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஜோதிடத்தில் ஒவ்வொரு நபரின் ராசியினைப் பொறுத்து அவர்களது குணங்கள், வசீகரிக்கும் தன்மை, எதிர்கால மற்றும் நிகழ்கால சம்பவங்கள் என அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும்.
இந்த சூழ்நிலையில் சில ராசியினர் மக்களை காந்தம் போன்று வசீகரிக்கும் தன்மை கொண்டவர்களாக இருக்கின்றனர். மேலும் இவர்களின் இயற்கையான அழகு பெரிய கூட்டத்தில் கூட தனித்து தெரிவதுடன், தான் சந்திக்கும் நபர்களிடம் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றது.
இந்த பதிவில் காந்தம் போன்ற ஆளுமையைக் கொண்ட ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
சிம்மம்
ராஜாவாக அறியப்படும் சிம்ம ராசியினரின் வசீகரமான ஆளுமையை யாராலும் அசைக்கவே முடியாததாகும். கிரகங்களின் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசியினர் இயல்பாகவே பிரகாசமாகவும், தன்னம்பிக்கையுடனும் இருப்பார்கள்.
இந்த பண்பானது மற்றவர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமானவர்களாக மாற்றுகின்றது. அனைவரது கவனத்தில் முக்கியமாக அறியப்படும் இவர்களின் தாராள மனப்பான்மை மக்களை எளிதில் ஈர்க்குமாம்.
இவர்களின் உற்சாகம், வாழ்க்கையின் மீதான ஆர்வம் இவை தலைவர்களாகவே மாற்றுகின்றது. மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் இவர்களின் செயலே வசீகரத்தை இன்னும் அதிகரிக்கின்றது.

விருச்சிகம்
விருச்சிக ராசியினர் வசீகரிக்கும் மற்றும் ஆர்வத்தினைத் தூண்டும் தீவிர ஆளுமையைக் கொண்டிருப்பார்கள். மாற்றம் மற்றும் சக்தியின் கிரகமான புளூட்டோவால் ஆளப்படும் இவர்கள் மற்றவர்களை எளிதில் கவரும் சக்தியை கொண்டுள்ளனர்.
இவர்களது தீவிரமான பார்வை மற்றும் உணர்ச்சிமிக்க மற்றும் உறுதியான இயல்பு இவை நம்பமுடியாத அளவிற்கு ஈர்க்கக்கூடியவர்களாக மாற்றுகின்றது.
ஆழமான உணர்ச்சிபூர்வமான தொடர்புகளை உருவாக்கும் திறனுக்காக அறியப்படும் இவர்களின் புதிரான ஆளுமை மற்றவர்கள் இவர்களைக் குறித்து பேசும்படியாக வைக்கின்றது.

தனுசு
தனுசு ராசியினர் சாகச மனப்பான்மை மற்றும் வாழ்க்கையின் மீதான தீராத ஆர்வத்திற்காக அறியப்படுவதுடன், இவை மற்றவர்களுக்கு கவர்ச்சிகரமானவர்களாகவே மாற்றுகின்றது.
முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி கிரகமான குருபகவானால் ஆளப்படும் தனுசு ராசியினர் மற்றவர்களை ஈர்க்கும் நேர்மையான மனப்பான்மை மற்றும் புதிய விடயங்களை ஆராய்வதில் ஆர்வத்தை கொண்டுள்ளனர்.
பரந்த மனப்பான்மை, ஞானத்தின் மீதான ஆர்வம் அவர்களை சுவாரஸ்யமான உரையாடலளாராக மாற்றுகின்றது. இவர்களின் நகைச்சுவை உணர்வு விளையாட்டுத்தனமான இயல்பு அனைவருக்கும் மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றுகின்றது.

துலாம்
துலாம் ராசியினரும் இயல்பான வசீகரம் மற்றும் நளினம் கொண்டதுடன், இதுவே மற்றவர்களுக்கு கவர்ச்சிகரமானவர்களாக மாற்றுகின்றது. காதல் மற்றும் அழகின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுகின்றது.
நேர்த்தியான மற்றும் கம்பீரமான நடத்தையைக் கொண்டிருப்பதுடன், இயல்பிலேயே ராஜதந்திரிகளாகவும், மற்றவர்களை வசதியாகவும், மதிப்பு மிக்கவராகவும் உணர வைக்கும் திறன் கொண்டவர்கள்.
இந்த குணங்கள் மற்றவர்கள் இவர்களை விரும்பப்படுபவர்களாகவும் மாற்றுகின்றது.
