மருக்கள் கழுத்து, கைகள், முதுகு மற்றும் அக்குள் போன்ற இடங்களிலும் தோன்றும். இந்த மருக்கள் தொந்தரவாக இருந்தால் அதை அகற்ற சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன.

உடலில் மருக்கள்
மருக்கள் உடலில் தோன்றுவது மிகவும் வித்தியாசமான ஒரு விடயம். இவை எல்லோருக்கும் இருக்காது. சிலருக்கு மட்டுமே இருக்கும்.
மருக்கள் சிலருக்கும் மற்றவர்கள் முன்னிலையில் தயக்கத்தை கொண்டு வரும். இவை முகத்தில் தோன்றினால் அது தொந்தரவை உண்டாக்கும்.
மருக்கள் பார்ப்பதற்கு அழகற்றவை மட்டுமல்ல, மிகுந்த வலியையும் உண்டாக்கும்.

இந்த மருக்கள் உடலில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தோன்றாது. கழுத்து, கைகள், முதுகு மற்றும் அக்குள் போன்ற இடங்களிலும் தோன்றும்.
எனவே மருக்கள் தொடர்ந்து தொந்தரவு செய்தால், சில வீட்டு வைத்தியங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்த தேவையற்ற மருக்களிலிருந்து நீங்கள் விடுபடலாம்.
அந்த வீட்டு வைத்தியங்கள் என்னவென்பதை பதிவில் பார்க்கலாம்.

வீட்டு வைத்தியங்கள்
உருளைக்கிழங்கு பல சருமப் பிரச்சனைகளுக்கும் சிகிச்சையளிக்க உதவுகிறது. உருளைக்கிழங்குச் சாறு மருக்களைக் குணப்படுத்துவதில் சிறந்தது.
இதற்கு ஒரு உருளைக்கிழங்குத் துண்டை எடுத்து, மருவின் மீது மெதுவாகத் தேய்த்தால் போதும். அவ்வாறு செய்வதால், 3-4 நாட்களுக்குள் அந்த மரு காய்ந்து உதிர்ந்துவிடும்.

மருக்களை நீக்குவதற்கும் வெங்காயச் சாறு உதவும். இதற்கு வெங்காயத்தைத் துருவவும் அல்லது நறுக்கி மிக்சியில் அரைக்கவும். அதை வடிகட்டி சாற்றை எடுக்கவும். இந்தச் சாற்றை தினமும் மருவின் மீது தடவி வந்தால், சில நாட்களுக்குள் அது காய்ந்து தானாகவே விழுந்துவிடும்.

ஆளி விதைகளைப் பயன்படுத்துங்கள். ஆளி விதைகள் உடல் நலத்திற்கு நன்மை தருவது மட்டுமல்லாமல், மருக்களை நீக்குவதிலும் திறம்பட செயல்படுகின்றன.
