சீரியல் நடிகை மற்றும் பிக்பாஸ் புகழ் ரவீனா ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில், அசத்தல் போல் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை ரவீனா தாஹா
தமிழ் சினிமாவில் ஜில்லா, பூஜை, புலி, ராட்சசன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் சிறுமியாக நடித்தவர் தான் நடிகை ரவீனா தாஹா.

இவர் டீன் ஏஜை எட்டியவுடன் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தங்கம் சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
இப்படங்களை தொடர்ந்து சிறுவயதிலேயே கவர்ச்சிகரமாக ஆட்டம் போட்டும் போட்டோஷூட் எடுத்து இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.இதனை தொடர்ந்து மெளன ராகம் 2 சீரியலில் முக்கிய ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

அதனை தொடர்ந்து, பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 91 நாட்கள் வீட்டில் இருந்து பின் எலிமினேட் செய்யப்பட்டார்.
சீரியலின் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் நீங்காத இடம் பிடித்த ரவீனா, அனைவருக்கும் மிகவும் பிடித்த நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் கோமாளியாக கலக்கினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் Jodi Are U Ready நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை சென்று டைட்டிலையும் ஜெயித்தார்.
தற்போது சமூக வலைத்தளங்களிலும், அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். இந்நிலையில், ட்ரெண்டிங் சேலையில் குடுப்பபாங்காக போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
