புதன் நட்சத்திர பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தை அள்ளும் 5 ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

புதன் பெயர்ச்சி

ஜோதிட சாஸ்திரத்தில் ஒன்பது கிரகங்களில் புதன் கிரகத்திற்கு முக்கிய இடம் உண்டு. புத்தி கூர்மை, சாதுரிய பேச்சு, வணிக நுணுக்கம், தகவல் தொடர்புத் திறன்கள் இவற்றிற்கு அதிபதியாக விளங்குகின்றார்.

புதன் தனது ராசி மற்றும் நட்சத்திரத்தினை மாற்றும் போது சில ராசியினரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்.

அந்த வகையில் திருவாதிரை நட்சத்திரத்திற்குள் நுழைந்த புதன் ஜுன் 11ம் தேதி வரை இந்த நட்சத்திரத்தில் நீடிக்கின்றார். புதனின் ஆசியோடு அசுர வளர்ச்சியடையும் ஐந்து ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

 

மேஷம்

மேஷ ராசியினர் இந்த பெயர்ச்சியினால் நிதானம், மனமகிழ்ச்சி கொண்டவர்களாக இருப்பார்கள். எடுக்கும் முடிவுகளில் பாராட்டும், நன்மையும் வந்து சேரும்.

உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதுடன், குடும்ப வாழ்க்கையில் இருந்த நீண்ட நாள் கசப்பு நீங்கி மகிழ்ச்சி உண்டாகுமாம்.

புதன் நட்சத்திர பெயர்ச்சி... அசுர வளர்ச்சி அடையும் 5 ராசிகள் | Lucky Zodiac Sign Due To Mercury Transit

கடகம்

கடக ராசியினருக்கு குடும்ப ஒற்றுமை, வளர்ச்சி மேலோங்கும் நிலையில், வேலைப்பளு காரணமாக குடும்பத்தினரிடம் நேரம் செலவிட முடியாமல் இருந்த நிலை மாறுமாம்.

வீட்டில் ஒற்றுமை அதிகரிப்பதுடன், கூட்டு வியாபாரத்தில் கவனமாக இருந்தால் நஷ்டத்தினை தவிர்க்க முடியும். தொழில் விரிவடைவதுடன், பிள்ளைகளால் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

புதன் நட்சத்திர பெயர்ச்சி... அசுர வளர்ச்சி அடையும் 5 ராசிகள் | Lucky Zodiac Sign Due To Mercury Transit

கன்னி

கன்னி ராசியினருக்கு உத்தியோக உயர்வு மற்றும் நிம்மதி கிடைப்பதுடன், அலுவலகத்தில் பணியை சிறப்பாக செய்வீர்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

கடின உழைப்பினை மேல் அதிகாரிகள் பாராட்டுவதுடன், விரும்பிய இடத்திற்கு பணிமாறுதல் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. பிள்ளைகள் குறித்து பெற்றோர்களின் நீண்ட நாள் கவலை தீரும்.

புதன் நட்சத்திர பெயர்ச்சி... அசுர வளர்ச்சி அடையும் 5 ராசிகள் | Lucky Zodiac Sign Due To Mercury Transit

துலாம்

துலாம் ராசியினருக்கு இந்த பெயர்ச்சியினால் பொருளாதார ரீதியாக பெரிய நிம்மதி கிடைப்பதுடன், கடன் விர்த்தியும், எதிரிகள் வீழ்ச்சியும் அரங்கேறும்.

வருமானம் எதிர்பாராத அளவிற்கு அதிகரிப்பதுடன், நீண்ட நாள் கடன்களையும் அடைத்து நிம்மதியாக இருப்பீர்கள். தொழில் செய்பவர்கள் எதிரிகளை தோற்கடிப்பதில் வெற்றி கிடைக்கும்.

பின்னால் சதி செய்யும் எதிரிகளை அடையாளம் கண்டு முடிப்பதுடன், பிள்ளைகள் கூலமாக சுப செய்திகளும் வந்து சேரும்.

மகரம்

மரக ராசியினருக்கு தங்களது திறமையினை நிரூபிக்க சிறந்த வாய்ப்புகள் தேடி வருவதுடன், சொந்த தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் புதிய உக்தியை கையாண்டு வெற்றி பெறுவார்கள்.

அதுமட்டுமின்றி தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதுடன், வேலையில் இருப்பவர்கள் எந்தவொரு தவறும் இல்லாமல் கொடுக்கப்பட்ட இலக்குகளை சரியான நேரத்தில் முடிப்பார்கள்.

புதன் நட்சத்திர பெயர்ச்சி... அசுர வளர்ச்சி அடையும் 5 ராசிகள் | Lucky Zodiac Sign Due To Mercury Transit