கடல் உணவுகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது கடல் உணவுகளில் மீன் சாப்பிடுபவர்கள் அதிகம்.

மீன் வறுவல் செய்தால் வீட்டில் குழந்தைகள் முதல் பரியவர்கள் வரை மொறு மொறு என்று அதை விரும்பி சாப்பிடுவார்கள்.
அனைவரும் ருசித்து சாப்பிடும் இந்த மீன் வறுவலை வழக்கமான முறையில் செய்யாமல் பதிவில் கூறியது போல மசாலா அரைத்து செய்தால் சுவை பிரமாதமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்
- மீன்
- பூண்டு - 9 பல்
- சிவப்பு மிளகாய் - 3
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
- கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி
- கருப்பு மிளகு - 20
- சீரகம் - 1 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - 2 கொத்து
- கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு
- எண்ணெய் - 1 டீஸ்பூன்
- தண்ணீர் - 1 டீஸ்பூன்
- உப்பு - 1 சுவைக்கேற்ப
- எலுமிச்சை சாறு - 1.5 தேக்கரண்டி
- எண்ணெய் - 3 டீஸ்பூன்

செய்முறை
- மீனை சுத்தம் செய்து கீறல்கள் போட்டு வைத்துக்கொள்ளவும்.
- பூண்டு, சிவப்பு மிளகாய், சீரகம், மிளகு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- அரைத்த மசாலாவை மீனில் தடவி, எலுமிச்சை சாறு சேர்த்து பிசறவும்.
- 30 நிமிடங்கள் ஊறவிடவும்.
- கடாயில் எண்ணெய் காயவைத்து மீனை சேர்க்கவும்.
- மிதமான தீயில் இருபுறமும் 3 நிமிடங்கள் வீதம் வறுக்கவும்.
- மசாலா மற்றும் எண்ணெயை மீன் மீது தடவி பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
- சூடாக பரிமாறவும்.
