நடிகர் அஜித்தின் அம்மா மோஹினி மணி சென்னையில் இன்று காலை உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். அவரது மறைவு செய்தி கேட்டு ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முதலமைச்சர் விஜய், நடிகர் அஜித் அம்மாவின் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துள்ளார்.

அஜித் அம்மா இறப்பிற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் விஜய் - நண்பராக உருக்கமான பதிவு! | Cm Vijay Deep Condolences To Ajith Mom Death

விஜய் இரங்கல்

இது குறித்து முதல்வர் விஜய் தனது பதிவில் குறிப்பிடுககையில், அருமை நண்பர் அஜித்குமாரின் தாயார் மோஹினி மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்து தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் என தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.