ஜோதிடத்தில், சனி பகவான் எதிர்மறையான கிரகமாக பார்க்கப்படுகின்றார் நீதியின் கடவுளாக திகழும் சனிபகவான் ஒருவர் செய்யும் செயல்களுக்கு ஏற்ப எந்தவிதமான பாரபற்சமும் பார்க்காமல் அநீதியும் நேராமல் பலன்களை இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார் என்பது ஐதீகம்.
சனியின் கோப பார்வையில் சிக்கினால் ஒருவருடைய வாழ்க்கையே பாழாகிவிடும். ஒருவருடைய ஜாதகத்தில் சனி தோஷம் இருந்தால் அவருடைய வாழ்வில் எதை தொட்டாலும் பிரச்சினை கிளம்பும் என நம்பப்படுகின்றது.
எனினும் ஜோதிட ரீதியாக சில ராசிக்காரர்கள் சனி பகவானுக்கு மிகவும் பிடித்தவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் மீது சனி பகவான் தனது சிறப்பு அருளைப் பொழிகிறார்.
இதனால், ஏழரைச் சனி போன்ற சவாலான காலக்கட்டங்களில் கூட, அந்த ராசிக்காரர்கள் பெரிய பாதிப்புகளில் இருந்து தப்பித்து விடுகின்றார்கள்.
அப்படி சனி பகவானுக்கே மிகவும் பிடித்த அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

ரிஷபம் ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார். சனி பகவான் மற்றும் சுக்கிரன் இடையே இணக்கமான உறவு இருப்பதாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சனி பகவானின் அருள் பெரும்பாலும் சாதகமாக அமைகிறது.
இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நிலைத்தன்மை, பொறுமை மற்றும் நிதி பாதுகாப்பை அனுபவிப்பவர்கள். கடின உழைப்பின் மூலம் மெதுவாக முன்னேறி, நிலையான வெற்றியை அடைவதிலும் இவர்களுக்கு திறன் அதிகம்.
துலாம்

துலா ராசியில் சனி பகவான் உச்ச நிலையில் இருப்பதாக ஜோதிடத்தில் கருதப்படுகிறது. அதனால் இந்த ராசி சனியின் சிறப்பு ஆசிகளையும், வலிமையான ஆதரவையும் பெறுகிறது.
துலா ராசியில் பிறந்தவர்கள் சமநிலையான சிந்தனை, பொறுப்புணர்வு மற்றும் கடின உழைப்புக்குப் பெயர் பெற்றவர்கள்.
சனி பகவானின் அருளால், இவர்கள் சவாலான சூழ்நிலைகளிலும் அமைதியாக சிந்தித்து சரியான முடிவுகளை எடுக்கும் திறன் பெற்றிருக்கிறார்கள்.
வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளை சமநிலையுடன் எதிர்கொள்ளும் மனவலிமையும் இவர்களுக்கு அதிகம்.
தனுசு

தனுசு ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். சனி மற்றும் குரு நட்பு கிரகங்களாகக் கருதப்படுவதால், தனுசு ராசிக்காரர்களுக்கு சனியின் தாக்கம் பெரும்பாலும் மிதமானதாகவே அமைகிறது.
இதன் காரணமாக, ஏழரைச் சனி அல்லது அஷ்டமச் சனி காலங்களிலும் கூட, இந்த ராசிக்காரர்கள் பெரிய பாதிப்புகளை எளிதில் சமாளிக்கும் மனவலிமையைப் பெறுகிறார்கள்.
மேலும், வாழ்க்கை அனுபவங்களின் மூலம் வளர்ச்சி அடைந்து, சோதனைகளை சாதனைகளாக மாற்றும் திறனும் இவர்களிடம் காணப்படுகிறது.
