பாதாம் மற்றும் உலர் திராட்சை இவற்றினை எவ்வாறு சாப்பிடுவது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பாதாம் மற்றும் உலர் திராட்சை

பாதாம் மற்றும் உலர் திராட்சை அதிகமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள நிலையில், தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளவே சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பாதாம் மற்றும் உலர் திராட்சை சாப்பிடுவதால் இதய ஆரோக்கியம் மற்றும் செரிமானம் மேம்படுகின்றது. ஆனால் நாள் ஒன்றிற்கு எத்தனை பாதாம் மற்றும் எவ்வளவு திராட்சை சாப்பிட வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பாதாம், உலர் திராட்சை.... எவ்வாறு சாப்பிடனும்னு தெரியுமா? | How Many Almonds And Raisins We Should Eat Daily

 

பாதாம் எவ்வளவு சாப்பிட வேண்டும்?

காலையில் பாதாம் சாப்பிடுவது மிகவும் நல்லது. இவை உடல்நலப் பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிப்பதுடன், ஒரு கைப்பிடி பாதாம் தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

இரவில் தண்ணீரில் பாதாமை ஊற வைத்து தோல் நீக்கி வெறும்வயிற்றில் சாப்பிடவும். இவற்றில் ஆரோக்கியமான கலோரிகள் உள்ள நிலையில் விரைவில் எடை அதிகரிக்கவும் வழிவகுக்கின்றது.

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பாதாம், உலர் திராட்சை.... எவ்வாறு சாப்பிடனும்னு தெரியுமா? | How Many Almonds And Raisins We Should Eat Daily

 

உலர் திராட்சை எவ்வளவு சாப்பிடனும்?

பாதாமைப் போன்று உலர் திராட்சையும் உடல் நலத்திற்கு நன்மை அளிப்பதுடன், தினமும் 10 முதல் 15 உலர் திராட்சையை சாப்பிடவும்.

இவற்றில் நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ள நிலையில், நீரிழிவு நோயாளிகள் உலர் திராட்சையை அளவோடு எடுத்துக் கொள்ளவும். இதனையும் ஊற வைத்து சாப்பிடவும்.

இவை இரண்டும் உடல் வெப்பத்தினை அதிகரிக்கும் என்பதால் ஊற வைத்து சாப்பிடுவதே சிறந்ததாகும்.

குறிப்பாக காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பாதாம் மற்றும் உலர் திராட்சை சாப்பிடுவது ஆற்றலை அதிகரிப்பதுடன், வளர்சிதை மாற்றத்தினையும் மேம்படுத்துகின்றது.