டபுள் ஆக்குபன்சி

அவ்னி மூவிஸ் சார்பில் நடிகை குஷ்பூவின் மகள் அனந்திகா தயாரிப்பில், அஷ்வின் கந்தசாமி இயக்கத்தில் சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்வநாதன், வினோத் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகவுள்ள படம் தான் டபுள் ஆக்குபன்சி.

3 வருஷமா நடிச்சிட்டு இருக்கேன்..ஆனா, அந்த அடையாளத்தை தாண்டி!! நடிகை சம்யுக்தா விஸ்வநாதன்.. | I Want To Make A Mark As An Actress Samyuktha

 

இப்படத்தின் பிரமோஷனுக்காக படக்குழுவினர் பேட்டியளித்து வரும் நிலையில் சாய் அபியங்கர் இசையில் வெளியான கட்சி சேர ஆல்பம் பாடல் மூலம் பிரபலமான சம்யுக்தா சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

சம்யுக்தா விஸ்வநாதன்

அதில், சாய் அபியங்கரின் கட்சி சேர ஆல்பத்தின் மூலம் என்னுடைய நடனம் பெரியளவில் பேசப்பட்டாலும் அதன்பின் இசை ஆல்பங்களும், குறும்படங்களிலும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் நடித்த படங்கள் வெளிவராமல் இருக்கிறது. விரைவில் அவை ஒவ்வொன்றாக வெளியாகும் என்று நம்புகிறேன்.

என்னுடைய நடனத்தை வைத்துதான் ரசிகர்கள் என்னை பார்க்கிறார்கள். இவள் நல்ல நடிகை என்று இப்படத்தின் மூலம் இனி ரசிகர்கள் சொல்வார்கள். நடனம் என்ற அடையாளத்தை தாண்டி, நடிகை என்ற அடையாளத்தை ஏற்படுத்த விரும்புகிறேன் என்று சம்யுக்தா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்