நாட்டில் நேற்றைய தினம் 383 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அவர்கள் அனைவரும், மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் தொற்றுறுதியான நோயாளயர்களுடன் தொடர்படையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் பதிவான நோயாளர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
குறித்த இரண்டு கொத்தணிகளில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 92 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த எண்ணிக்கையுடன், நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 570 ஆக அதிகரித்துள்ளது.
வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுபவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 918 ஆக அதிகரித்துள்ளது.
இதேநேரம், இலங்கையில் நாளொன்றில் அதிகளவான கொவிட்-19 நோயாளர்கள் நேற்று குணமடைந்தனர்.
கொவிட்-19 தொற்றிலிருந்து 765 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றிலிருந்து நாளொன்றில் அதிகளவானோர் குணமடைந்த நாளாக நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.
இந்த எண்ணிக்கையுடன், வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 623 ஆக அதிகரித்துள்ளது.