உடல் பருமன் இப்போதெல்லாம் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. அந்த வழகயில் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் உடல் எடை குறைக்க எத்தனை அடிகள் நடக்க வேண்டும்.
எத்தனை அடிகள் நடக்க வேண்டும்?
எந்த வயதிலும் உடல் எடையைக் குறைப்பது சவாலானது, ஆனால் 50 வயதில் அது இன்னும் கடினமாக மாறி விடும்.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் அறிவுறுத்தல் படி இளைய அல்லது வயதானவர்களைக் காட்டிலும் 40 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் உடல் எடை அதிகரிப்பில் அதிகமாக இருக்கின்றனர்.

50 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 44% பேர் உடல் பருமன் கொண்டவர்களாக இருக்கின்றனர். "வயதாவதோடு தொடர்புடைய ஹார்மோன், தசை மற்றும் வளர்சிதை மாற்ற மாற்றங்கள் காரணமாக, 50 வயதில் உடல் எடையைக் குறைப்பது ஒரு சவாலான காரியமாகி விட்டது.
'சர்வதேச சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் பொது சுகாதாரம்' என்ற அறிவியல் இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், 50 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள் உடல் பருமன் ஏற்படும் அதிக ஆபத்தில் உள்ளனர்.
இதற்கு தீர்வாக நடைபயிற்ச்சி ஒரு சிறந்த தீர்ப்பாக உள்ளது. அந்த வகையில் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் எத்தனை அடிந்ந்தால் உடல் எடையை குறைக்க முடியும் என்பதை பார்க்கலாம்.

50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்
ஆய்வின்படி, 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தினமும் சுமார் 8,500 அடிகள் நடக்க வேண்டும். தினமும் இவ்வளவு அடிகள் நடப்பதன் மூலம், பெண்கள் விரைவாக உடல் எடையைக் குறைக்க முடியும்.
தினமும் இவ்வளவு அடிகள் நடப்பவர்களுக்கு உடல் எடை கூடுவதற்கான ஆபத்து குறைவாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேலும், தினமும் 8,500 அடிகள் நடப்பது உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
