தலைமுடிக்கு எண்ணெய் மசாஜ் செய்வது பெரும்பாலும் மக்களிடையே பின்பற்றப்படும் ஒரு விஷயமாக உள்ளதால் இந்த பழக்கம் சரியானதா? என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

நாம் எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்க தலைக்கு எண்ணெய் மசாஜ் செய்து குளிப்பது வழக்கம். இதனால் தலைமுடியின் வளர்ச்சி, வலுவான, பளபளப்பான தலைமுடி மற்றும் மயிர் கால்களின் ஆரோக்கியத்திற்காக பயன்பாட்டில் இருந்து வருகிறது.

மளமளவென முடி வளர தலைக்கு எண்ணெய் மசாஜ் கொடுப்பது சரியானதா? | Hair Oiling Any Effect In Your Hair How It Impactதலைமுடி பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமாகும். நாம் எமது தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற வைட்டமின்கள் மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த எண்ணெய்களை பயன்படுத்துகின்றோம். 

இதனால் தலைமுடியின் மயிர்கால்களையும் வலுவாக்கி, வறட்சி, பொடுகு ஆகியவற்றைப் போக்கி, தலைமுடியின் சேதத்தை தவிர்க்க உதவுகிறது.

முடிக்கு எண்ணெய் மசாஸ் செய்வதால் தலைமுடிக்கு கிடைக்கும் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம், கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் E மற்றும் K போன்றவை தலைமுடியை ஆரோக்கியமாக மாற்றுகிறது. 

நாம் பிற அழகு சாதனப்பொருட்களை உபயோகித்தாலும் அதன் தாக்கத்தில் இருந்து விடுவிக்கிறது. ஆனால் எண்ணெய் மசாஜ் செய்யும் போது ஒரு சிலருக்கு நன்மை தரும் ஒரு சிலருக்கு பக்க விளைவை ஏற்படுத்தும்.

மளமளவென முடி வளர தலைக்கு எண்ணெய் மசாஜ் கொடுப்பது சரியானதா? | Hair Oiling Any Effect In Your Hair How It Impactஅதிகப்படியான எண்ணெய் தடவுவதால் தலைமுடியில் உள்ள துளைகள் அடைக்கப்பட்டு அதனால் தலைமுடி உதிர்வு மற்றும் பொடுகு உண்டாகலாம்.

சிலர்தலையில் எண்ணெய் வைத்து விட்டு மறுநாள் காலையில் கழுவார்கள் இது முற்றிலும் தவறான விஷயம். தலைமுடிக்கு எண்ணெய் தடவி அதனை ஒரு மணி நேரம் ஊற வைத்த பிறகு கழுவுவது சிறந்தது.