சனி பகவானின் ஆசியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிரிஷ்டம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சனியின் உதயம்
ஜோதிடத்தில் மிக முக்கியமாக பார்க்கப்படும் கிரகம் சனி கிரகம். சனி கிரகம் என்றாலே பலருக்கும் பயம் தான் தொற்றிக் கொள்ளும்.
ஏனெனில் நாம் செய்த தவறுக்கு ஏற்ற தண்டனை கொடுக்கும் கிரகமாக சனிபகவான் பார்க்கப்படுகின்றது. நாம் செய்யும் நன்மை, தீமைக்கு தகுந்து பலன் கிடைக்கும்.
அந்த வகையில் சனியின் ஆசீர்வாதத்தை பெறும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மகரம்
மகர ராசியினர் சனி பகவானுக்கு பிடித்த ராசியாக இருக்கின்றனர். இந்த ராசியில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளியாகவும், தான் செய்ய நினைக்கின்ற வேலையினை விடாமுயற்சியுடன் செய்பவராகவும் இருப்பார்கள். தோல்வி ஏற்பட்டாலும், இறுதியில் அதனை வெற்றியாகவே மாற்றிவிடுவார்கள்.

கும்பம்
கும்ப ராசியினர் சனிபகவான் நன்மையை அளிக்கின்றார். இவர்கள் மிகவும் நேர்மையானவராகவும், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையைக் கொண்டவராகவும் இருக்கின்றனர்.
சனி பகவானின் பிடித்த குணமான நேர்மையை பின்பற்றுவதில் முக்கிய குணமாக வைத்திருக்கின்றனர். இவர்களின் உழைப்பிற்கு ஏற்ற பலன் இவர்களுக்கு கிடைக்கும்..

துலாம்
துலாம் ராசியினருக்கும் சனி பகவானின் அருள் அதிகமாகவே இருக்குமாம். கொடுப்பதில் கஞ்சத்தனம் காட்டாத இவர்கள், நியாயத்தின் பக்கம் நிற்பார்களாம்.
நேர்மையாக இருக்கும் இவர்களுக்கு அதிர்ஷ்டமும், பண வரவும் வருவதுடன், தொழில் வளர்ச்சியும் இவர்களைத் தேடி வருமாம்.
ரிஷபம்
சுக்கிரன் அதிபதியாக இருக்கும் ரிஷப ராசியினருக்கு சனி பகவான் நல்லதை செய்கின்றார். சுக்கிரன், சனி இரண்டு நட்பு கிரகங்கள் ஆகும். ஆதலால் சனி பகவான் ரிஷப ராசியினர் மீது கணிவான பார்வையை வைத்திருக்கின்றார்.
இவர்களுக்கு எந்தவொரு பிரச்சனை என்றாலும் சனி பகவான் அவர்களை பாதுகாப்பதுடன், வாழ்க்கையில் தடைகள் எதுவும் வராமல் பாதுகாக்கவும் செய்கின்றார்.

