சுமார் 250 திரைப்படங்களுக்கு மேல் நடித்த நடிகை சுதா பணக்கார குடும்பத்தில் பிறந்தாலும் இன்று அனாதையாகவும் சொத்துக்களை பறிகொடுத்தும் தனித்துள்ளார்.

 

நடிகை ஹேமா சுதா

நடிகை ஹேமா சுதா 1984-ம் ஆண்டு வெளியான மோகன், ஊர்வசி நடிப்பில் வெளியான ‘ஓ மானே மானே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார்.

சினிமாபடி இவர் சுதா என அறியப்பட்டாலும் இவருடைய உண்மையான பெயர் ஹேமா சுதா ஆகும். ‘வண்ண கனவுகள்’, ‘எங்க சின்ன ராசா’, ‘குரு சிஷ்யன்’, ‘கொடி பறக்குது’, ‘கேப்டன்’, ‘அரசு’, இப்படி சுமார் 250 திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் இவர் நடித்திருக்கிறார்.

இவரது சினிமா வாழ்க்கை இப்படி இருக்கிறது. ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அவ்வளவு பிரச்சனைள இருக்கிறது. 

பணக்கார குடும்பத்தில் பிறந்தாலும் இன்று யாருமில்லாத அனாதை - கண்ணீருடன் நடிகை சுதா | Actre Sudha Talk About Her Life Happends Net Worth

கண்ணீருடன் பேசிய சுதா

சுதா தன்னுடைய வாழ்க்கை பற்றி கூறும் போது “சில்வர் ஸ்பூன் என்பது போல நான் ‘பான் வித் டைமன்ட் ஸ்பூன்’ என்ற சொல்லுக்கேற்ப பணக்கார வீட்டில் தான் நான் பிறந்தேன். பெரிய வீடு, வீட்டில் வேலையாட்கள் எல்லாம் இருந்தனர்.

கார்களுக்கு 3 ட்ரைவர்கள் இருந்தனர். செல்வ செழிப்பாக தான் வளர்ந்தேன். என்னுடன் பிறந்தது 4 ஆண் குழந்தைகள்.

நான் மட்டும் பெண் குழந்தை என்பதால் மிகவும் செல்லமாக என்னை வளர்த்தனர் ஆனால் இந்த வாழ்க்கை நீடிக்கவில்லை என்னுடைய தந்தை நோய்வாய்பட்டு படுத்த படுக்கையானார்.

பணக்கார குடும்பத்தில் பிறந்தாலும் இன்று யாருமில்லாத அனாதை - கண்ணீருடன் நடிகை சுதா | Actre Sudha Talk About Her Life Happends Net Worth

அவருக்கு என்ன நோய் இருக்கிறது என்பதை பல கட்ட சோதனையின் பின்னர் புற்று நோய் என அறிந்துகொண்டோம். தந்தையின் நோயை குணப்படுத்த சொத்துக்கள் அனைத்தையும் விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அப்போது என்னுடைய வயது 8 தான். என்னதான் நாங்கள் செல்வந்தராக வாழ்ந்தைலும் சொத்துக்களை இழந்தததால் அம்மாவின் தாலியை அடமானம் வைத்து தான் நான் படித்தேன்.

நான் படித்து முடிந்து சினிமாவிற்குள் வந்ததும் பணம் புகழ் என எல்லாம் கிடைத்தது. இதனால் நான் டெல்லியில் ஒரு ஹோட்டலை தொடங்கினேன். அப்போது கையில் இருந்த பணம் அனைத்தும் முடிந்து விட்டது.

பணக்கார குடும்பத்தில் பிறந்தாலும் இன்று யாருமில்லாத அனாதை - கண்ணீருடன் நடிகை சுதா | Actre Sudha Talk About Her Life Happends Net Worth

 

ஒரே கையெழுத்தில் கையில் இருந்த பணம் முழுவதையும் இழந்து விட்டேன். இப்போது பணம் இல்லை. எனக்கு ஒரு மகன் தான் அவனும் என்னுடன் சண்டை போட்டு விட்டு வெளிநாட்டு போய் அங்கேயே செட்டிலும் ஆகி விட்டார்.

கணவரும் இல்லை அவரும் கைவிட்டு விட்டார். எவ்வளவு செல்வந்த குடும்பத்தில் நான் பிற்நதிருந்தாலும் என்னுடைய வாழ்க்கை இப்போது அப்படி தான் உள்ளது” என கண்ணீருடன் கூறி உள்ளார்.