குரு பகவானின் முதல் ராசி மாற்றம் ஜூன் மாதத்திலும், இரண்டாவது ராசி மாற்றம் அக்டோபர் மாதத்திலும் நிகழப் போகிறது. இது குரு இரட்டை பெயர்ச்சியாகும்.
குரு இரட்டை பெயர்ச்சி
குரு கிரகம் மகிழ்ச்சி, நல்வாய்ப்பு, திருமண வாழ்க்கை மற்றும் ஞானம் ஆகியவற்றிற்கான காரணமாக பார்க்கப்படுகின்றார்.
இதனால் ஜோதிடத்தில் குருப்பெயர்ச்சி மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இருக்கின்றது. குரு தன்னுடைய இடத்தை மாற்றும் போதெல்லாம் ஒவ்வொரு ராசிகள் வாழ்விலும் பெரிய மாற்றம் வரும்.

இந்த ஆண்டில் அதாவது 2026 ஆம் ஆண்டில் குரு கிரகம் இரண்டு முறை ராசி மாற்றம் செய்யப்போகிறார்.
முதல் குரு பெயர்ச்சி : ஜூன் 2, 2026 அன்று கடக ராசியில் பிரவேசிக்கும். இரண்டாம் குரு பெயர்ச்சி குருவின் இரண்டாவது பெயர்ச்சி அக்டோபர் 31 அன்று நிகழும்.
இந்த குருப்பெயர்ச்சி எந்த ராசிகள் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டாக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்
- குருவின் பெயர்ச்சியானது மேஷ ராசியினருக்கு பல நன்மைகளை கொண்டு வரும். பழைய கடன்களிலிருந்து விடுபடுவீர்கள். திடீர் நிதி ஆதாயங்களுக்கான வாய்ப்புகள் வரும். நிதி நிலைமை வலுப்பெறும். நீண்ட காலமாக நீங்கள் வேலை மாற்றத்தைப் பற்றிச் சிந்தித்தால் அது கண்டிப்பாக நிறைவேறும்.
மிதுனம்
- இந்த கிரகப் பெயர்ச்சியானது, மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கும் நன்மை கொடுக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் துறையில் ஒரு முக்கிய ஒப்பந்தம் வரும். திருமண வரன்கள் உங்களைத் தேடி வரலாம். வீடு அல்லது வாகனம் வாங்கும் உங்கள் கனவு நிறைவேறக்கூடும். சொத்துக்கள் பெருகும்.
சிம்மம்
- சிம்ம ராசியைச் சேர்ந்தவர்கள் தங்கள் வருமானத்தில் மிகப்பெரிய உயர்வை காண்பார்கள். முதலீடு செய்வதில் இருந்து அதிகமான லாபம் வரும். வெளிநாட்டிற்குப் பயணம் செல்லலாம். உங்கள் நிதி நிலைமை முன்பை விட அதிகமாக இருக்கும். வீடு வாங்கும் கனவு நிறைவேறும். தொழிலில் மிகப்பெரிய லாபம் கிடைக்கும்.
தனுசு
- உங்கள் சுகபோகங்களும் வசதிகளும் பெருகும். வீட்டில் மங்களகரமான நிகழ்வுகள் நடைபெறும்.நல்ல செய்திகள் வந்து சேரும். உங்கள் பொருளாதார நிலை முன்பை விட வலுப்பெறும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். தொழில் துறையில் இருப்பவர்கள் கணிசமான லாபம் ஈட்டுவார்கள். அதிகமான பண வரவு இருக்கும்.
