கேது நட்சத்திர பெயர்ச்சி இன்று (ஏப்ரல் 20) நடக்கிறது. இன்று பிற்பகல் 1.40 மணியளவில் கேது பகவான் மக நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார்.
கேது பெயர்ச்சி
ஜோதிட ரீதியாக கிரகங்கள் தங்கள் இடத்தை மாற்றி கொள்கின்றன. இதனால் ஜோதிடத்தில் இருக்கும் 12 ராசிகளும் தாக்கத்தை அனுபவிக்கும்.
அந்த வகையில், இன்று கேது பகவான் பெயர்ச்சி நடக்கிறது. கேது பகவான் இன்று இன்று (ஏப்ரல் 20) நடக்கிறது. இன்று பிற்பகல் 1.40 மணியளவில் கேது மக நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார்.

இது கேதுவின் சொந்த நட்சத்திரம். இதனால், குறிப்பிட்ட ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும்.
டிசம்பர் மாதம் வரை கேது பகவான் மக நட்சத்திரத்தில் இருப்பார். இதனால் 4 ராசிகள் வாழ்க்கையில் செல்வம் செழிப்பு பணத்தை அள்ளப்போகின்றது.

மேஷம்
- கேது பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு செல்வம் அதிகரிக்கும். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். சிறிய பிரச்சனைகள் தீரும். தொழிலில் அசுர வளர்ச்சி காண்பீர்கள். மேலும், கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க இது சிறந்த காலம்.
கடகம்
- கேது நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு இருந்து வந்த பிரச்னைகள் தீரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். உடன் பிறந்தவர்கள் உதவி செய்வார்கள். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலை முடியும். நிதி நிலைமை மேம்படும். பணியிடத்தில் உங்களுக்கு புதிய பொறுப்பு கிடைக்கும்.
சிம்மம்
- கேது நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறுவார்கள். மேலும், பணிடத்தில் உங்களுக்கு வருமானம் உயரும். உடன் பிறந்தவர்கள் நிதி ரீதியாக உதவி செய்வார்கள். தொழில் விரிவாக்கத்திற்கு அதிக வாய்ப்புள்ளது. தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். உங்களுக்கு தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும்.
தனுசு
- கேது பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் தொழில் முன்னேற்றங்கள் ஏற்படக் கூடும். பதவி உயர்வுகள் கிடைக்கும். மேலும், தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். மேலும், கூட்டுத் தொழிலில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். மேலும், சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு கேதுவின் அருளால் புதிய வேலை கிடைக்கும். மேலும், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
