ஜோதிட ரீதியில் நவகிரங்களின் பெயர்ச்சிக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. காரணம் கிரகங்களின் இடமாற்றம் மற்றும் கிரக சேர்க்கையால் உருவாகும் அரிய யோகங்கள் என்பன 12 ராசிகளின் வாழ்க்கையுடன் தொடர்புப்படுகின்றது.
அந்தவகையில், இன்று 19 ஆம் திகதி அழகு, காதல் மற்றும் ஆடம்பரதின் கிரகமாகவும், அசுர குருவாகவும் திகழும் சுக்கிர பகவான் தனது சொந்த ராசியான ரிஷபத்துக்குள் பிரவேசிகின்றார். இந்த கிரக மாற்றம் 'மாளவ்ய யோகம்' என்ற வலிமையான யோகத்தையும் உருவாக்குகின்றது.
அதன் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தினாலும் உச்சகட்ட சாதக பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

இந்த கிரகப் பெயர்ச்சியானது ரிஷப ராசியிலேயே நிகழ்வதால், அவர்களின் வாழ்வில் பல்வேறு வகையிலும் சாதக பலன்கள் கிடைக்கப்போகின்றது.
குறிப்பாக இவர்களின் தொழில் வாழ்க்கையில் அமோக முன்னேற்றம் உண்டாகும்.நீண்ட நாள் இருந்த கடன் தொல்லைகளுக்கு முடிவு கட்டும் வாய்ப்பு உருவாகும்.
நிதி நிலையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு அசுர வளர்ச்சி உண்டாகும் யோகம் காணப்படுகின்றது. சுக்கிரன் அருளால் பணவரவுக்கு பஞ்சமே இருக்காது.
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த கிரகப் பெயர்ச்சி பெரிய திருப்புமுனையாக இருக்கும். வாழ்வில் இதுவரையில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவீர்கள்.
புதிய தொழில் ஆரம்பிக்க வேண்டும் என நீண்ட காலமாக போராடியவர்களுக்கு இந்த காலகட்டம் அதற்கான வாய்ப்புகளை தனாகவே உருவாக்கிக்கொடுக்கும்.
முன்னைய முதலீடுகளில் இருந்து பெரிய தொகை பணம் கைக்க வரும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான யோகம் உருவாகும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிரன் பெயர்ச்சி வாழ்வில் அதிர்ஷ்ட கதவுகளை திறக்கப்போகின்றது. இந்த காலகட்டத்தில் தொட்டதெல்லாம் வெற்றியாகும்.
பணியிடத்தில் சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுப்பாடுகள் நீங்கி சுமூகமான சூழல் உருவாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் அதிகாரம் மிக்க பதவியில் அரும் வாய்ப்பு கிட்டும்.
பணவரவு திருப்திகரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் வெள்ளியில் முதலீடு செய்வதால் கூடுதல் அதிர்ஷ்டத்தை பெறலாம். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
