பொதுவாகவே ஆண்களானாலும் சரி பெண்களானாலும் சரி தங்களின் உடல் எடையை குறைத்து கவர்ச்சிகரமான தோற்றத்தில் இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.

ஆனால் தற்காலத்தில் வெகுவாக மாற்றமடைந்து வரும் வாழ்க்கை முறை பழக்கங்களால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் பெரும்பாலும் அனுபவிக்கும் ஒரு உடல்நல பிரச்சினையாக உடல் பருமன் அறியப்படுகின்றது.

அதனால் உடல் எடையைக் குறைக்க பலரும் டயட்டில் இருந்து வருகின்றார்கள். அவர்கள் அதிக கலோரிகள் கொண்ட உணவை எவ்வளவு சுவையானதாக இருந்தாலும் சாப்பிடத் தயங்குவார்கள்.

அப்படி டயட்டில் இருப்பவர்களுக்கு சுவையானதும் அதிக புரதம் நிறைந்ததுமான முட்டை பன்னீர் இட்லி எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையாக பொருட்கள்

பன்னீர் - 50 கிராம் (துருவியது)

நாட்டு கோழி முட்டை- 3

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய்- 1 (நறுக்கியது)

துருவிய தேங்காய்- சிறிதளது

மஞ்சள் தூள்- 1/4தே.கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை

டயட்டில் இருப்பவர்களுக்காகவே நாவூரும் சுவையில் முட்டை பன்னீர் இட்லி! பண்ணலாமா? | How To Make Tasty Egg Itli For While Dieting

முதலில் ஒரு பாத்திரத்தில் மூன்று நாட்டுக்கோழி முட்டைகளை உடைத்து ஊற்றிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் துருவிய பன்னீர், வெங்காயம், பந்சை மிளகாய், தேங்காய் துருவல், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து இந்த கலவையை இட்லி பாத்திரத்தில் ஊற்றி 5 தொடக்கம் 10 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கினால் அவ்வளவு தான் அருமையான சுவையில் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த டயட் முட்டை இட்லி தயார்.