நடிகை துஷாரா விஜயன் ட்ரெண்டிங் சேலையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை துஷாரா விஜயன்
தமிழ் சினிமாவில் “போதை ஏறி புத்தி மாறி” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் துஷாரா விஜயன். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார்.

அதனை தொடர்ந்து வெளியான “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தன் மூலம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார்.
இந்த திரைப்படம் அவரது சினிமா பயணத்தில் ஒரு திருப்புமுனையாகவும் அடையாளமாகவும் மாறியது என்றால் மிகையாகாது.

அதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு “நட்சத்திரம் நகர்கிறது” என்ற படத்தில் நடித்தன் மூலம் தைரியமான கதாப்பாத்திரம் என்றாலே இவர்தான் என்ற விம்பத்தை ஏற்படுத்தினார்.
பின்னர் தனுஷ் இயக்கிய “ராயன்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

இறுதியாக ரஜினியின் வேட்டையன், விக்ரமின் வீர தீர சூரன் போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போதும் சில படங்களை கைவசம் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில், துஷாரா தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
