காலையில் எழுந்தவுடன், உங்கள் கண்களில் நீர் வடிகிறது என்றால் அது உடலில் பல நோய்களை குறிக்கிறது என்பது பலருக்கும் தெரியாது.

காலையில் எழுந்ததும் கண்களில் நீர் வடிதல்
சிலருக்குக் கண்களில் இருந்து அதிக நீர் வடியும் என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இது அதிகமாக காலையில் எழுந்தவுடன் தான் இருக்கும்.
குழந்தைகள் இந்தப் பிரச்சனையால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். கண்களில் நீர் வடிவதகு பல காரணங்கள் இருக்கலாம். சில சமயங்களில், நம் கண்களில் உள்ள கண்ணீர்க் குழாயில் ஏற்படும் அடைப்பின் காரணமாக இந்த நிலை ஏற்படலாம்.
ஆனால் நமது உடலில் சில நோய்கள் இருந்தாலும் கூட அதற்காக நமது கண்களில் நீர் வடியும் எனப்படுகின்றது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

என்ன காரணம்?
ஒவ்வாமைகள்
- கண்களில் நீர் வடிதலுக்கு ஒவ்வாமைகள் ஒரு முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றது. பூக்கள், இலைகள், புல், புகைப்பிடித்தல், வாசனைத் திரவியங்கள், சில மருந்துகள் மற்றும் மாசுபாடு உட்பட பல்வேறு பொருட்களால் ஒவ்வாமைகள் ஏற்படலாம். சில சமயங்களில், செல்லப்பிராணிகளாலும் கூட ஒவ்வாமைகள் ஏற்படலாம். இதை நீங்கள் புரிந்துகொண்டு, அந்தப் பொருட்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

கண் வெண்படல அழற்சி
- மாறிவரும் காலநிலையில் கண் வெண்படல அழற்சியின் பாதிப்பு அதிகரிக்கிறது. இதனால் ஏற்படும் தொற்றின் காரணமாக, கண்கள் சிவந்து நீர் வடியும். திடீரெனக் கண்கள் அதிகப்படியாக நீர் வடிவதற்கான மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

அடைபட்ட கண்ணீர்க் குழாய்கள்
- சில சமயங்களில் கண்களில் உள்ள கண்ணீர்க் குழாய்கள் அடைபடுகின்றன. இந்த நிலை கண்ணீர்க் குழாய் அடைப்பு என்று அழைக்கப்படுகிறது. இதனால் கண்களில் இருந்து தொடர்ந்து நீர் வடியும். இது குழந்தைகளுக்குக் கண்களில் நீர் வடிதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது ஒரு பிறவிப் பிரச்சனையாகும், இது பெரும்பாலும் தானாகவே சரியாகிவிடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
