ஆகக்குறைந்த பேருந்து கட்டணத்தை 20 ரூபாவாக நிர்ணயித்தல், சாதாரண சேவை கட்டணத்தை குறிப்பிடத்தக்களவு அதிகரித்தல் உள்ளிட்ட 10 யோசணைகள், இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் ஒரு மீற்றர் சமூக இடைவெளியை பேண வேண்டும் என சுகாதார அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பேருந்துகளில் ஆசனத்தில் அருகருகில் பயணிகள் அமர்ந்து செல்லலாம் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, இந்த முரண்பாடான வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற வேண்டும் என தாங்கள் கோருவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், ஆகக் குறைந்த பேருந்து கட்டணத்தை 20 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய கட்டணத்தை குறிப்பிடத்தககளவு அதிகரிக்க கோரியுள்ளதாகவும் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.