வாஸ்து சாஸ்திரமானது தொன்று தொட்டு இந்தி மதத்தில் கடைப்பிடிக்கப்ட்டு வரும் ஒரு சாஸ்திர முறையாகும். இது இயற்கையில் ஐம்பூதங்களின் ஆற்றலை சமநிலை செய்து நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் ஒரு கலையாக அறியப்படுகின்றது.
வாஸ்து சாஸ்திர நிபுணர்களின் கருத்துப்படி நாம், வீட்டில் அழங்காரத்துக்கான வைத்திருக்கும் பொருட்கள் கூட நமது வாழ்வில் நடக்கும் நேர்மறை, எதிர்மறை விடயங்களில் ஆதிக்கம் செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.
வாஸ்து சாஸ்திரத்தில் பல்வேறு பொருட்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அந்த வகையில், வீட்டில் எந்தெந்த பொருட்களை வைப்பதால் செல்வ செழிப்பு மற்றும் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
செழிப்கை கொடுக்கும் பொருட்கள்
1. பகவத் கீதை

இந்து மதத்தில் பகவத் கீரை ஒரு புனிதமான நூல் என்பதால் இதனை வீட்டில் வைத்திருப்பது வீட்டில் உள்ள தீய அதிர்வலைகளை நீக்கி, நேர்மறை ஆற்றலை அதிகரிக்கச்செய்யும். அதனாவ் வீட்டில் செல்வ .செழிப்புக்கு பஞ்சமே இருக்காது. மேலும் தினசரி பகவத் கீதையை பாராயணம் செய்வது மன அமைதியையும் கொடுக்கும்.
2. வெள்ளி நாணயம்

வாஸ்து சாஸ்திரத்தின் பிரகாரம், வெள்ளி என்பது ஆடம்பரத்தின் அதிபதியாக திகழும் சுக்கிரனின் ஆதிக்கதால் நிறைந்திருப்பதால், வீட்டில் வெள்ளி நாணயத்தை வைத்திருப்பது மிகவும் நல்லது. இது மாத்திரமற்றி வெள்ளி சந்திரனுடன் தொடர்புடையது எனவும் குறிப்பிடப்படுகின்றது. எனவே வீட்டில் ஒரு வெள்ளி நாணயத்தை வைத்திருக்கது பணம் உட்பட சகலவிதமாக செல்வ செழிப்பையும் ஈர்க்க உதவும்.
3. ஐந்து சோழிகள்

சோழிகளானது லட்சுமி தேவியுடன் தொடர்புடையது என சாஸ்திரங்களில் குறிப்பிடப்படுகின்றது. எனவே இதனை வீட்டில் வைத்திருப்பதால் பணத்தின் கடவுளாக அறியப்படும் லட்சுமி தேவயின் ஆசியையும் கொடுக்கும். இதனால் வீட்டில் பணத்துக்கு குறைவே இருக்காது.
4. மஞ்சள் வேர்

இந்து மத நம்பிக்கைகளின் பிரகாரம், மஞ்சள் விஷ்ணு பகவானுடன் தொடர்புடையது. விஷ்ணு பகவான் எங்கு உள்ளாரோ, அங்கு லட்சுமி தேவியும் இருப்பார் என்பது ஐதீகம். எனவே மஞ்சள் வேர் அல்லது மஞ்சள் கட்டியை பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் பணத்துக்கும் தட்டுப்பாடே ஏற்படாது என்பது நம்பிக்கை. இது வீட்டில் உள்ள கெட்ட சக்திகளை விரட்டியடிக்கும் என்றும் நம்பப்படுகின்றது.
5. ரோஜாப்பூ செடி

வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில தாவரங்கள் வீ்ட்டில் செல்வ செழிப்பை அதிகரிக்கும் என்று நம்ப்படுகின்றது. குறிப்பாக ரோஜா பூக்கள் லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்த பூ. வாஸ்துப்படி, இந்த ரோஜாப் பூ செடியை வீட்டில் வைத்திருப்பதால் லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்கும். மேலும் இது வீட்டிற்கு ஒரு இனிமையாக காட்சியை கொடுக்கும்.
