சரிகமபவில் இந்த வாரம் வாக்கு பதிவு போட்டி ஆரம்பமாக உள்ளது. இதில் இலங்கை போட்டியாளர் திறமையாக பாடி உள்ளார்.

 

சரிகமப

பிரபல டிவி நிகழ்ச்சியில் மக்களின் மனம் பறித்த நிகழ்ச்சி தான் சரிகமப. இதில் தற்போது லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 5 போட்டி நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிய பலர் தற்போது இசைத்துறையில் சாதித்து வருகின்றனர். தற்போது லிட்டில் சாம்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் சிறப்பாக பாடி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகின்றனர்.

சரிகமப - வில் தேன் குரலில் பாடிய இலங்கை போட்டியாளர்... வாக்குபதிவில் தெரிவாகுவாரா? | Saregamapa Lil Champs Season 5 Apr 25 2026

இந்த வாரம் One-on-One சுற்று இடம்பெற உள்ளது. இந்த சுற்றில் ஒவ்வொரு போட்டியாளர்களும் இருவரிருவராக போட்டியிட்டு பாடுவார்கள். அவர்களுக்கு நடுவர்கள் ஒவ்வொருவரும் வாக்களித்து ஒருவரை தெரிவு செய்வார்கள்.

அந்த வகையில் தற்போது வெளியாகிய காணொளி படி மூன்று போட்டியாளர்கள் சிறப்பாக பாடி உள்ளனர். அதில் இலங்கை போட்டியாளர் வர்ஜாவும் ஒருவர்.