கடந்த மார்ச் மாதத்தில் பிரான்ஸில் மேயர்களை தேர்வு செய்வதற்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

இதில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே உள்ள புறநகர் பகுதியான கிரீஞி நகராட்சியில் நடைபெற்ற தேர்தலில் பிலிப்பி ரியோ மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸில் துணை மேயரான புதுச்சேரி பூர்விக இளைஞர்

இதே போல், புதுச்சேரியை பூர்விகமாக கொண்ட கணேஷ் ஜெராமின் என்பவர் கிரீஞி நகராட்சியின் துணை மேயராக 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

2014 ஆம் ஆண்டில் நகராட்சிப் பயணத்தை தொடங்கிய போது, பட்டியலில் 33வது இடத்தில் இருந்த அவர், 2020 ஆம் ஆண்டில் முதல்முறையாக துணை மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

தற்போது 2026 ஆம் ஆண்டில் மீண்டும் துணை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதிய கிரீஞி நகராட்சி நிர்வாகத்தில் சுற்றுச்சூழல், நகரத் திட்டமிடல் மற்றும் உள்ளூர் நிர்வாகம் ஆகியவற்றிற்கு பொறுப்பேற்க உள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "நான் கிரிக்னியில் பிறந்து, வளர்ந்தவன். இப்போது இங்கு வசிப்பவர்களுக்குச் சேவை செய்யும் ஒரு சுகாதார நிபுணராக என் தொழிலைச் செய்கிறேன்.

2026 ஆம் ஆண்டில், நமது நகரத்திற்குச் சேவை செய்யும் இந்தப் பொறுப்பைத் தொடர்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன். என் மீது மீண்டும் நம்பிக்கை வைத்துள்ள நமது மேயர் பிலிப் ரியோவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்" என தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பிறந்த இவரது தாத்தா அய்யாசாமி செல்லப்பன், பின்னர் பிரான்ஸ் ராணுவத்தில் இணைந்து அங்கு புலம் பெயர்ந்தார்.