விலங்குகளுக்கு உணவளிப்பதை வழக்கமாக வைத்திருந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததை தாங்கி கொள்ள முடியாமல் குரங்கு செய்த காரியம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வைரல் காணொளி
கர்நாடக மாநிலத்தில் சென்னபட்டனா தாலுகா பி.வி.ஹள்ளி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி பர்வதம்மா என்பவர் விலங்குகளுக்கு உணவு கொடுப்பதை ஒரு வழக்கமாக வைத்துள்ளார்.
இதன்போது தான் அவரது வீட்டிற்கு ஒரு குரங்கு வழக்கமாக வந்துள்ளது. அந்த மூதாட்டியும் அந்த குரங்கிற்கு உணவளித்து வந்துள்ளார்.

பின்னர் அந்த குரங்கு ஒவ்வொரு நாளும் அந்த மூதாட்டியின் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு அவருடன் விளையாடிவிட்டு மாலையில தான் தன் இருப்பிடத்திற்கு திரும்புமாம் என கூறி உள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு 80 வயது காரணமாக அந்த மூதாட்டி நே்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் வழக்கம்போல மூதாட்டியைபார்க்க வந்த குரங்கு அவர் இறந்ததை கண்டு சோகமடைந்தது.

தொடர்ந்து மூதாட்டியின் உடலை கட்டி தழுவி அவருக்கு தனது இறுதி அஞ்சலியை செலுத்தியது. இந்த காட்சி அங்கிருந்த மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
மூதாட்டியின் உடலை அடக்கம் செய்யும் வரை அந்த குரங்கு அங்கேயே காத்துக்கொண்டிருந்துள்ளது. பின்னர் அந்த குரங்கை பத்திரமாக பிடித்து வேறு இடத்தில் விட்டதாக உள் ஊர் வாசிகள் தெரிவித்து உள்ளனர்.
