ஏப்ரல் மாதத்தில் பல கிரக மாற்றங்கள் உருவாகின்றன. இதனால் சில ராசிகள் பணம் புகழ் வெற்றி என்று பலவற்றை பெறப்போகின்றது.
உச்சம் பெறும் ராசிகள்
ஏப்ரல் மாதத்தில் சூரியன், செவ்வாய், புதன், சனி என்ற 4 கிரகங்கள் ஒரே கிரகத்தில் ஒன்று சேருகின்றன.
ஒவ்வொரு கிரகங்களும் தங்கள் இடத்தை அதற்கேற்ற காலத்தில் மாற்றி கொள்கின்றன. இதனால் 12 ராசிகளும் தாக்கத்திற்குள்ளாகும்.
ஜோதிடப்படி ஏப்ரல் மாத்தின் கிரக மாற்றம் சில ராசிகளுக்கு வேலை, வருமானம், வெற்றி எல்லாமே நன்மை கொடுக்கும் என்று கூறப்படுகின்றது. அந்த ராசிகள் பற்றி பார்க்கலாம்.

மேஷம்
- இந்த ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் மிகவும் அதிர்ஷ்டமான மாதம்.
- மேஷ ராசிக்காரர்கள் அமைதியானவர்களாக இருந்தாலும் இந்த கால கட்டத்தில் பல தெளிவான முடிவை எடுப்பார்கன்.
- அவர்களின் தலைமை குணம் அதிகரிக்கும்.
- யாரிடமும் தயக்கிமில்லாமல் பேசுவார்கள்.
- இந்த மாற்றம் ஊப்ரல் மாதம் இவர்களிடையே இருக்கும்.
- பதவி உயர்வு அல்லது புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம்.
மிதுனம்
- மிதுன ராசியினரின் வாழ்க்கையில் இது ஒரு பொற்காலம்.
- பல வருடங்களாக எதையும் செய்தால் பயன் இல்லை, அதிர்ஷ்டம் சரியில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் நடக்கும் நல்ல மாற்றங்கள் நம்ப முடியாத மாதிரி இருக்கும்.
- “என் வாழ்க்கையில் இவ்வளவு நல்ல மாற்றம் வரும் என்று நினைத்ததில்லை” என்று சொல்லும் நிலை வரும்.
- காரணம், புதன், செவ்வாய் கிரகங்கள் இந்த ராசியில் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை கொண்டு வரும்.
- புதிய யோசனைகள் வரும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. வருமானம் அதிகரிக்கும். தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிட்டும்.
சிம்மம்
- இந்த ராசிக்காரர்களுக்கு தலைமைப் பொறுப்பில் வெற்றி கிடைக்கும். இவர்கள் சாதாரணமாகவே ஆற்றல் மிக்கவர்கள்.
- ஏப்ரல் மாதத்தில் அவர்கள் செய்யும் ஒவ்வொரு வேலைகளிலும் திறமை தெளிவாக தெரியும். ரொம்ப தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். எதை செய்தாலும் வெற்றி பெற முயல்வார்கள்.
- சூரியன், சனி சேர்ந்து இந்த ராசிக்கு நல்ல பலன்களை தரப் போகிறது. பெரிய பதவி, பெரிய அங்கீகாரம் கிடைக்கலாம். “நான் தான் பெரியவன்” என்ற எண்ணத்தை குறைக்க வேண்டும்.
- இது சவாலாக இருக்கும். அதை ஜெயித்தால் அற்புதமான பலன் கிடைக்கும்.
தனுசு
- இந்த ராசிக்காரர்களுக்கு ஏப்ரலில் பெரிய பண வளர்ச்சி வரும். ஏனென்றால், இந்த மாதத்தில் அவர்கள் சவால்களை தைரியமாக ஏற்றுக்கொள்வார்கள். கடினமாக உழைப்பார்கள்.
- அவர்களின் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். சாதகமான கிரகங்களால் வெளிநாட்டு வாய்ப்புகள் அதிகரிக்கும்.
- தங்கள் தொழிலை விரிவுபடுத்த நினைப்பார்கள். வெளிநாடு போக ஆசைப்பட்ட தனுசு ராசிக்காரர்கள், ஏப்ரலில் கடினமாக முயற்சி செய்தால் வெற்றி பெற வாய்ப்பு அதிகம்.
