ஜோதிடத்தின்படி சில சட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் கஷ்டபடவே பிறந்தவர்கள் என கூறப்படகின்றது.
நமது வாழ்க்கையில் ராசி பலன்கள் பார்த்து நமது அன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி அறிந்துகொள்வோம். ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் உள்ளன. அதே போல தான் நட்சத்திரங்களும்.
ஜோதிடத்தில் மொதடதம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இந்த அனைத்து நட்சத்திரங்களுக்கும் உவ்வொரு குணாதிசயங்கள் உள்ளது.
அதன்படி சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் கஷ்டப்பட பிறந்தவர்கள் என கூறப்படுகின்றது. அந்த நட்சத்திரங்கள் யார் என்பதை பதிவில் விரிவாக பார்க்கலாம்.

கஷ்டப்பட பிறந்த நட்சத்திரங்கள்
சதயம்
- சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களை ராகு ஆழ்கிறார். இதனால் இவர்கள் வாழ்க்கையில் பல சோதனைகள் இருக்கும். இவர்கள் வாழ்க்கையில் பல முக்கிய கட்டங்களில் தனிமையை உணர்வாகள்.
- இவர்கள் வாழ்க்கையில் பல சிரமங்கள் இருக்கும். ஆனால் இவர்களின் ஒரு ஆயுதம் இவர்களின் புத்திசாலித்தனம். அதை கொண்டு இவர்கள் வாழ்க்கையை வெல்வார்கள்.
ஆயில்யம்
- இந்த நட்சத்திரகாரர்களுக்கு கஷ்டங்கள் அதிகமாக இருக்கும். ஆயில்ய நட்சத்திரத்தின் அதிபதி புதன் பகவான் ஆவார். இதனால் இவர்கள் அதிகமாக நம்புவர்கள் இவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்வார்கள்.
- தேவை இல்லாத விடயங்களில் மாட்டிக்கொள்வார்கள். வாழ்க்கையில் எதிலும் அதரிக சிரமம் வரும். மன அழுத்தம் அதிகமாக இருக்கும்.
பரணி
- பரணி நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். சுக்கிரனாக இருந்தாலும் கூட இவர்கள் கடின உழைப்பாளியாக இருந்தால் மட்டுமே அதற்குரிய பலன் கிடைக்கும்.
- இவர்களுக்கு அதிக பொறுப்புணர்வும், கடமைகளும் குவியும். இவர்களுக்கு எதுவுமே எளிதில் கிடைத்துவிடாது. அதிர்ஷ்டம் என்ற சொல்லுக்கே இவர்கள் வாழ்க்கையில் இடமில்லை.
கேட்டை
- கேட்டை நட்சத்திரத்தின் அதிபதி புதன் பகவான் ஆவார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறு வயதிலேயே பெரிய பொறுப்புகள் வந்து சேரும். குடும்ப பாரத்தை சிறுவயதில் ஊற்றுக்கொள்ள நேரிடும்.
- தனக்கென வாழாமல் தன்னை சார்ந்தவர்களுககாக வாழ்வார்கள்.
- இவர்கள் கடின உழைப்பாளியாக இருந்தாலும் வாழ்நாள் முழுவதும் நிதி சிக்கல்களையும், கஷ்டங்களை மட்டுமே சந்திப்பார்கள்.
