ராசிப்பலன் என்பது ஒருவரின் வாழ்க்கை பற்றி கணிக்கிறது. எதிர்காலத்தில் அந்த நபர் எப்படி வாழ போகிறார் என்பதை கூறுகிறது. பொதுவாக நாம் ஒரு சுப காரியத்தை செய்ய விருக்கிறோம் என்றால் ராசிப்பலன் பார்ப்பது வழக்கம்.
தொடங்கவிருக்கும் ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி அன்று குரு பகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் நுழைகின்றார். இந்த நட்சத்திரத்தில் நவம்பர் 28ஆம் தேதி வரை இந்த பயணத்தை குருபகவான் பயணிக்க போகின்றார்.
மங்களகரமாக கருதப்படும் குருபகவான் குடும்பம் மகிழ்ச்சி, செல்வம், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார் . இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்த குரு பகவானின் இந்த பயணம் எந்தெந்த ராசிகளுக்கு இன்பம் தருகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
குருபகவானின் இந்த பயணம் உங்களுக்கு ஒரு அதிஷ்ட வாழ்க்கையை கொடுக்கப்போகிறது. சுருக்கமாக சொல்லப்போனால் உங்களுக்கு தான் குரு பகவான் ழுழு ஆதரவும் தரப்போகிறார்.
இந்த காரணத்தினால் நீங்கள் எந்த ஒரு வேலையாக இருந்தாலும் சரி எந்த ஒரு துறையாக இருந்தாலும் சரி வெற்றி பெறுவது நிச்சயம். இதுவரையில் மற்றவர்களிடம் கிடைக்காத பாராட்டுக்கள் உங்களுக்கு கிடைக்கும்.
இதில் ஆச்சரியப்பட ஒன்றுமிருக்காது. வியாபாரம் வேலை இதில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலையில் முன்னேறி வாழ ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
கடகம்
நட்சத்திர இடமாற்றம் நல்ல பலன்களை அள்ளி குவிக்கப்போவது உங்களுக்கு தான். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் இது வரையில் பல அவமானங்களை கண்டு வந்திருப்பீர்கள் இதை இந்த கால கட்டத்தில் நீங்கள் தோற்கடிக்க முடியும்.
வாழ்க்கை துணையிடம் நிங்கள் எதிர்பார்த்த எல்லாம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் ஒரு விஷயத்தில் மதலீடு செய்தால் பயமில்லாமல் செய்யலாம். அது பல மடங்கு லாபத்தை ஈட்டி தரும்.
இதுவரையில் ஏற்பட்டு வந்த துன்பங்கள் இனிமேல் இருக்காது. நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். இந்த குரு பெயர்ச்சியை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
விருட்சிகம்
மிகப்பெரிய முன்னேற்றம் என்றால் அது இந்த குரு பகவானின் பெயர்ச்சி மூலம் தான் நீங்கள் பெறுவீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள் ஆனால் நீங்கள் அவர்களால் ஆதாயம் பெறுவீர்கள்.
வேலை செய்யும் இடத்தில் சக ஓழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உங்களை புரிந்துகொண்டு செயற்படுவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதோடு நல்ல வருமானமும் கிடைக்கும்.எல்லா வகயிலும் நீங்கள் நன்மை மட்டுமே அனுபவிப்பீர்கள்