பொதுவாகவே உண்மையான காதல் இரண்டு உள்ளங்களுக்கு இடையில் பிணைப்பு ஏற்படுவதால் மாத்திரமே நிகழ்கின்றது. இதனால் தான் காதல் இனம், மதம், மொழி, நிறம், வயது என எதையும் பார்ப்பது கிடையாது.

உண்மையில் ஒருவர் மிது காதல் ஏற்படும் போது உலகமே எதிர்த்தாலும் தங்களின் மனதை மாற்றிக்கொள்ள முடியாது.

இந்த ராசி ஆண்கள் வயதில் மூத்த பெண்களை தான் காதலிப்பார்களாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Men Are Likes Senior Partner

ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் பெரும்பாலும், தங்களை விட வயதில் மூத்த பெண்ணின் மீது தான் அதிக ஈர்ப்பு கொண்டவர்களாக இருப்பார்களாம்.

அப்படி வயதில் மூத்த பெண்கள் மீது காதல் கொள்ளும் ஆண் ராசியினர் யார் யார் எனவும் அதற்கான ஜோத்திட ரீயியிலான காரணம் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்

கடகம்

இந்த ராசி ஆண்கள் வயதில் மூத்த பெண்களை தான் காதலிப்பார்களாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Men Are Likes Senior Partner

கடக ராசி ஆண்கள் காதலின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுவதால், இயல்பாகவே காதல் மீது அதிக ஈர்ப்பு கொண்டவர்களாகவும், திருமண பந்தத்தை அதிகம் மதிப்பவர்களாகவும் அறியப்படுகின்றார்கள். 

இவர்கள் பிறப்பிலே அதிக உணர்திறன் கொண்டவர்களாக இருப்பதால், இவர்களின் சிற்றின்பங்களை விட பாதுகாப்பான திருமண உறவை உருவாக்குவதில் தான் அதிக கவனம் செலுத்துவார்கள்.

தங்களை நன்றாக கவனித்துக்கொள்ளகூடிய பெண்ணை காதலித்தால் தான் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருப்பார்கள். இவர்களின் இந்த தனித்து குணம் வயதில் மூத்த பெண்களின் மீது இவர்கள் ஈர்க்கப்பட முக்கிய காரணமாக இருக்கும். 

விருச்சிகம்

இந்த ராசி ஆண்கள் வயதில் மூத்த பெண்களை தான் காதலிப்பார்களாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Men Are Likes Senior Partner

விருச்சிக ராசியில் பிறந்த ஆண்கள் ரகசிய இயல்புக்கும், மர்மமான குணத்துக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் காதல் உட்பட  தங்களின் தனிப்பட்ட விடயங்களை  எளிதில் யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள மாட்டார்கள்.

இவர்கள் தங்களின் துணை அழகானவராக இருப்பதை விடவும், அறிவானவராகவும், சூழ்நிலையை புரிந்து நடந்துக்கொள்ள கூடிய முதிர்ச்சியுடையவராகவும் இருக்க வேண்டும் என்ற குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்காக செய்யப்புடும் மேலோட்டமான விஷயங்களை விட வாழ்க்கையின் ஆழமான அனுபவங்கள் மீது ஆர்வம் கொண்டவராக இருப்பதும் இவர்கள் தங்களை விட வயதில் மூத்த பெண்ணை காதல் செய்ய காரணமாக இருக்கும்.

கும்பம்

இந்த ராசி ஆண்கள் வயதில் மூத்த பெண்களை தான் காதலிப்பார்களாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Men Are Likes Senior Partner

கும்ப ராசி ஆண்கள் வாழ்வில் எல்லாவற்றையும் விட சுதந்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களை கட்டுப்படுத்த நினைக்காத பெண்ணை தான் வாழ்க்கை துணையாக அடைய நினைப்பார்கள்.

தங்களின் தொழில், பணம் என்பவற்றை பொருட்படுத்தாது உண்மையாக காதலை கொடுக்கும் ஒரு முதிர்ச்சியடைந்த மனநிலை கொண்ட பெண்ணை தேடுவதே இவர்கள் வயதில் மூத்த பெண்ணை காதல் செய்ய காரணமாகின்றது.

குறிப்பாக வெளித்தோற்றத்தை மதிப்பிடாமல் அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளக்கூடிய ஒரு துணையை தான் அவர்கள் தேடுகின்றார்கள்.