அசைவ உணவு என்றால் அதில் முதலில் நினைவிற்கு வருவது மட்டன் தான். மட்டனை வைத்து பல வித விதமான உணவுகள் செய்யலாம். அந்த வகையில் இதில் சூப் செய்யும் முறை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறாம். 

குளிர் காலத்தில் உடலை உள்ளிருந்து சூடாக வைத்திருப்பது அவசியம். இதற்கு நம் அதற்கேற்ற வகையில் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 

அதற்கு தான் இந்த ஆட்டுக்கால் சூப் செய்முறை கொடுக்கபட்டுள்ளது. இந்த ரெசிபியில் ஆட்டுக்கால் சூப் எப்படி செய்யலாம் அதற்கு என்னனென்ன பொருட்கள் தேவை என்பதை பார்க்கலாம். 

ஆட்டுக்கால் சூப் - வீட்டிலேயே எளிதாக எப்படி செய்வது? | Mutton Leg Soup Recipe Benefits Aattukal Soup

தேவையான பொருட்கள்

  • ஆட்டுக் கால்கள் - 2 (நன்றாக வெந்தது),
  • வெங்காயம் - 1 நறுக்கியது,
  • பூண்டு - 2-3 பல் நறுக்கியது,
  • இஞ்சி - சிறிது நறுக்கியது,
  • இலவங்கப்பட்டை - சிறிது,
  • கிராம்பு - 2 முதல் 3 வரை,
  • கொத்தமல்லித் தூள் - அரை டீஸ்பூன்,
  • சிவப்பு மிளகாய் - சுவைக்கேற்ப,
  • கொத்தமல்லி இலை - சிறிது நறுக்கியது,
  • உப்பு - சுவைக்கேற்ப,
  • எண்ணெய் - 2 டீஸ்பூன்,
  • மஞ்சள் - ஒரு சிட்டிகை. 

செய்முறை

சூப் செய்ய முதலில் மட்டன் கால்களை சுத்தமான தண்ணீரில் 2-3 முறை நன்கு கழுவவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கவும். வெங்காயம், பூண்டு, இஞ்சி, இலவங்கப்பட்டை, கிராம்பு, சிவப்பு மிளகாய், கொத்தமல்லி இலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.

ஆறியதும், மிக்ஸியில் போட்டு, கொத்தமல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். பின்னர் பிரஷர் குக்கரை சூடாக்கவும்.

ஆட்டுக்கால் சூப் - வீட்டிலேயே எளிதாக எப்படி செய்வது? | Mutton Leg Soup Recipe Benefits Aattukal Soup

பின்னர் சிறிது எண்ணெய் சேர்க்கவும். கழுவிய மட்டன் கால்களை 2 நிமிடங்கள் வதக்கவும். அரைத்த மசாலா மற்றும் உப்பு சேர்க்கவும். தேவைக்கேற்ப தண்ணீர் சேர்க்கவும்.

5 முதல் 6 முறை விசில் விடவும். அழுத்தம் குறைந்த பிறகு, மூடியை அகற்றவும். சூப்பை வடிகட்டவும். பரிமாறும் போது, ​​சூப்பில் சிறிது கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும். சூடான மட்டன் கால் சூப்பைப் பரிமாறவும்.

ஆட்டுக்கால் சூப் - வீட்டிலேயே எளிதாக எப்படி செய்வது? | Mutton Leg Soup Recipe Benefits Aattukal Soup