இளவயதில் முடி நரைக்க என்ன காரணம் என்பது தெரியாதவர்கள் பதிவை படித்து காரணத்தை தெரிந்துகொண்டு சரி செய்யலாம்.
தற்போது இருப்பவர்களுக்கு நரை முடி பிரச்சனை என்பது விரைவாக வருகிறது. இந்த வெள்ளை முடிகளை மறைக்க ஹென்னா, கலர் என பலவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் நாம் வெளித்தோற்றத்திற்கு என்ன செய்தாலும் நமது உடலின் உள்ளிருக்கும் ஒரு வைட்டமின் குறைபாட்டால் தான் இந்த நரை முடி வருகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுவே உண்மை.

அதுதான் வைட்டமின் பி12. வைட்டமின் பி12 குறைபாட்டால், முடி விரைவில் நரைக்கத் தொடங்குகிறது. இது தவிர, அதிக மன அழுத்தம், தூக்கமின்மை, தவறான உணவுப் பழக்கம் ஆகியவையும் இந்தப் பிரச்சனையை அதிகமாக்குகின்றன.
சரியான உணவு, போதுமான தண்ணீர் மற்றும் இயற்கையான முடி பராமரிப்பு மூலம், இந்த நரை முடி பிரச்சனைக்கு தீர்வு காணலாம். இந்த வைட்டமின் குறைபாட்டை நீங்கள் சரி செய்தால் அது முடியை நிரந்தரமாக கருப்பாக்கும்.

முடியின் நிறம் மெலனின் என்ற நிறமியைப் அடிப்படையாக கொண்டது. உடலில் வைட்டமின் பி12 குறைவாக இருந்தால், மெலனின் உற்பத்தி குறைந்து, உங்கள் முடி கருப்பு நிறத்தில் இருந்து மெதுவாக வெள்ளையாக மாறும்.
சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு வைட்டமின் பி12 மிகவும் அவசியம். இதன் குறைபாடு முடியை பலவீனப்படுத்துவதோடு, இளநரைக்கும் வழிவகுக்கிறது.
எனவே வைட்டமின் பி12 குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தால், மருத்துவரை அணுகி இரத்தப் பரிசோதனை செய்வது அவசியம். அதன் பின் அதற்கேற்ற அடறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.

அறிக்கையின் அடிப்படையில், உங்கள் மருத்துவர் பரிந்துரைத்தபடி சப்ளிமெண்ட்ஸ் அல்லது மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
முட்டை, பால், பால் பொருட்கள், இறைச்சி, மீன், காளான் போன்ற இயற்கையாக பி12 வழங்கும் உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த உணவுகள் பி12 குறைபாட்டைக் குறைக்கவும், ஆரோக்கியமான முடியை ஊக்குவிக்கவும் உதவுகின்றன. முடி ஆரோக்கியத்திற்கு வைட்டமின் பி12 மட்டுமல்ல, சரிவிகித உணவும் மிகவும் அவசியம்.

தினமும் பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள், நிறைய தண்ணீர் குடிக்க மறக்க கூடாது. மன அழுத்தத்தைத் முற்றாக தவிர்க்கவும்.
நல்ல தூக்கம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை உங்கள் முடியை வலுவாக வைத்திருக்கவும், அதன் இயற்கையான நிறத்தை நீண்ட காலத்திற்கு தக்கவைக்கவும் உதவும். இதை செய்தால் மட்டுமே நிரந்தரமாக நரை முடி கருப்பாகும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
