ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை,திருமணம், காதல், விசேட ஆளுமைகள், பொருளாதார நிலை உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரத்தில்  குறிப்பிடப்படுகின்றது.

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் காதல் விடயத்தில் சைக்கோ தனமாக நடந்துக்கொள்ளும் ஆபத்தான காதலர்களாக இருப்பார்களாம்.

சைக்கோ தனமாக காதல் செய்யும் top 3 ஆண் ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Top 4 Possessive And Controling Zodiac Boyfriends

அப்படி பாதுகாப்பின்மை உணர்வின் காரணமாக நடைமுறைக்கு கொஞ்சமும் பொருந்தாத வகையில் சைக்கோ போல் காதல் செய்யும் இயல்புடைய ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

சைக்கோ தனமாக காதல் செய்யும் top 3 ஆண் ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Top 4 Possessive And Controling Zodiac Boyfriends

ரிஷப ராசியில் பிறந்த ஆண்கள் உண்மைக்கும், நேர்மைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒருவரை காதல் செய்கின்றார்கள் என்றால் அவர்களுக்காக உயிரையும் கொடுக்கும் அளவுக்கு விசுவாசிகளாக இருப்பார்கள்.

ஆனால் இவர்களின் நேர்மைக்கு கொஞ்சமும் சளைக்காத காதல் துணையை தான் இவர்கள் தேடுவார்கள். இவர்களின் இந்த குணம் காதல் விடயத்தில் இவர்களின் சைக்கோ தனத்துக்கு முக்கிய காரணமாக இருக்கும்.

இவர்களால் காதல் தோல்வியை ஏற்றுக்கொள்ளவே முடியாது காரணம் இவர்கள் அதிகம் உண்மையாகவே நடந்துக்கொள்வார்கள். இவர்களுக்கு துரோகம் நடந்துவிடுமோ என்ற அச்சம் இவர்கள் துணை மீதான அதிக கட்டுப்பாடுகளையும் விதிகளையும் புகுத்த காரணமாகிவிடுகின்றது.

கன்னி

சைக்கோ தனமாக காதல் செய்யும் top 3 ஆண் ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Top 4 Possessive And Controling Zodiac Boyfriends

கன்னி ராசியில் பிறந்தவர்கள் மிகவும் குறைவான பொறுமை கொண்டவர்களாக அறியப்படுகின்றார்கள். குறிப்பாக இவர்கள் எந்த விடயத்திலும் முழுமையையும் நேர்த்தியையும் எதிர்பார்க்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்களின் இந்த குணங்கள் துணையிடம் நடைமுறைக்கு ஒத்துவராத கட்டுபாடுகளை விதிக்கவும், எரிச்சலூட்டும் நடத்தைகளுக்கும் காரணமாக இருக்கும். 

இந்த ராசி ஆண்கள் தங்களின்  காதலி செய்யும் சின்ன சின்ன தவறுகளுக்கு  கூட அவர்களை அதிகமாக தண்டிக்கும் குணத்தை கொண்டிருப்பார்கள். இவர்களின் இந்த நடத்தைகள் இவர்களை காதல் சைக்கோவாகவே மாற்றிவிடுகின்றது. 

விருச்சிகம்

சைக்கோ தனமாக காதல் செய்யும் top 3 ஆண் ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Top 4 Possessive And Controling Zodiac Boyfriends

விருச்சிக ராசியில் பிறந்த ஆண்கள் ரகசிய இயல்புக்கும், மர்மமான குணத்துக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் யாரிடடும் எளிதில் நெருங்கி பழகாதவர்களாக இருப்பார்கள்.

இப்படிப்பபட்ட குணம் கொண்ட இவர்கள் காதலில் விழும் போது தங்களின் துணை தங்களுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்துக்கொள்ள வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு மற்ற ராசியினரை விட அதிகமாக இருக்கும்.

அதன் விளைவாகவே இந்த ராசி ஆண்கள் காதலிக்கு அதிக கட்டுப்பாடுகளை விதிக்கின்றார்கள். இவர்கள் சாதாரணம் என நினைக்கும் விதிமுறைகள் மற்றவர்கள் பார்வையில் நிச்சயம் சைக்கோ தனமாகவே தோற்றும்.