பொதுவாகவே தங்களின் துணை தங்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் ஆசைப்படுவார்கள்.

ஆனால் நாம் நமது துணைக்கு உண்மையாக இருக்க வேண்டும் என சிந்திக்கும் தன்மை கொண்டவர்கள் உலகில் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றார்கள்.

உங்க துணையிடம் இந்த அறிகுறிகள் இருந்தா ஜாக்கிரதை! ஏமாற்றுவது உறுதி | What Are The Five Signs That Someone Is Lying

சிலர் இயல்பிலேயே உண்மையை மட்டும் பேசுபவர்களாகவும் யாருக்கும் துரோகம் நினைக்காதவர்களாகவும் இருப்பார்கள். அதற்காக எல்லோரும் அப்பயே இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.

குறிப்பிட்ட சிலர் தங்களின் மகிழ்ச்சிக்கான தங்களின் துணையை ஏமாற்றுவதற்கு சற்றும் தயங்காத குணத்தை கொண்டிருப்பார்கள்.

உங்க துணையிடம் இந்த அறிகுறிகள் இருந்தா ஜாக்கிரதை! ஏமாற்றுவது உறுதி | What Are The Five Signs That Someone Is Lying

அப்படி திருமணத்தையும், காதலையும் மறந்துவிட்டு துணையை ஏமாற்றும் துணையிடம் காணப்படும் முக்கிய குணங்கள் குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

1.கண்களைப் பார்க்காமல் இருப்பது: பொதுவாகவே ஒருவர் நம்மிடம் பொய் சொல்லும்போது கண்களை நேரடியாகப் பார்ப்பதில் தயக்கம் காட்டுவார் கண்களை பார்த்து கதைக்காத போது, அவர்கள் நம்மிடம் பொய் சொல்கின்றார் என்பதை உறுதியாக சொல்ல முடியும். இந்த அறிகுறி உங்கள் துணையிடம் தொடர்ச்சியாக இருக்கின்றது என்றால் அவர்கள் உங்களை ஏதோ ஒரு வகையில் ஏமாற்றுகின்றார் என்று அர்த்தம்.

உங்க துணையிடம் இந்த அறிகுறிகள் இருந்தா ஜாக்கிரதை! ஏமாற்றுவது உறுதி | What Are The Five Signs That Someone Is Lying

2. சொன்னதையே சொல்லுதல்: நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்கும்போது, ​​உங்களுக்குப் பதிலளிக்காமல் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருப்பார்கள். அல்லது நீங்கள் கேட்ட கேள்வியையே  மீண்டும் கேட்பார்கள்  இப்படி ஒரு விடயத்துக்கு தெளிவாக விளக்கம் கொடுக்காமல், பிதற்றிக்கொண்டிருக்கின்றார்கள் என்றால், அவர்கள் ஏமாற்றுகின்றார்கள் என்று அர்த்தம். 

3. உடல் அசைவுகளில் ஏற்படும் மாற்றங்கள்: ஒருவர் உங்களிடம் பொய் சொன்ன பின்னர் இவர்களை நீங்கள் கவனித்து பார்க்கின்றீர்கள் என்றால்,  படுத்துக் கொள்ளும்போது, ​​அவர்கள் அசௌகரியமாக உணரத் தொடங்குகிறார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் மூக்கைத் தொடுவார்கள், கையால் வாயை மூடுவார்கள், கழுத்தை சொறிவார்கள். உட்காரும்போதும் அவர்கள் அமைதியற்றவர்களாக தோற்றமளிப்பார்கள் இவ்வாறான அறிகுறிகள் இருக்கின்றது என்றால், உங்கள் துணை உங்களை ஏமாற்றுகின்றார் என்று அர்தம். 

உங்க துணையிடம் இந்த அறிகுறிகள் இருந்தா ஜாக்கிரதை! ஏமாற்றுவது உறுதி | What Are The Five Signs That Someone Is Lying

4. அதிகமாக விளக்குதல்: அவர்கள் ஒரு கேள்விக்கு நேரடியான பதிலைக் கொடுக்காமல், பல விடயங்களை பற்றி பேசி நீங்கள் என்ன கேள்வி கேட்டீர்கள் என்பதை உங்களுக்கே மறக்க வைத்துவிடுவா்கள்.இப்படி அதிகமாக விளக்கம் கொடுக்கும் ஒருவர் நிச்சயம் பிழைகளை மறைக்க முயற்சிக்கின்றார் என்றே அர்த்தம். 

உங்க துணையிடம் இந்த அறிகுறிகள் இருந்தா ஜாக்கிரதை! ஏமாற்றுவது உறுதி | What Are The Five Signs That Someone Is Lying

5. தொலைபேசியில் கூடுதல் கவனமாக இருங்கள்: உங்கள் துணை திடீரென தனது போனின் கடவுச்சொல்லை மாற்றினாலோ அல்லது போன் மீது அதிக கவனம் எடுத்துக்கொண்டாலோ ஜாக்கிரதையாக இருங்கள் இது ஏமாற்றுவதன் முக்கிய அறிகுறி என உளவியல் நிபுணர்களும் கூறுகின்றார்கள். இவ்வாறாக அறிகுறிகளை அவதானிக்கும் பட்சத்தில் அவதானமாக இருக்க வேண்டும்.