சுக்கிரன், காதல், ஆடம்பரம் மற்றும் செல்வ செழிப்புக்கு சொந்தக்காரராக பார்க்கப்படுகிறார்.
இவர் அவருடைய நிலையில் இருந்து மாறும் பொழுது ஜோதிடர்களால் கூர்ந்து கவனிக்கப்படுவார். ஏனெனின் சிலர் இவரின் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.
அந்த வகையில், இன்னும் 5 நாட்களில் சுக்கிரன் தன்னுடைய ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறப்போகிறார். இந்த மாற்றத்தினால் சுக்கிரன்- குரு பகவான் இருவரும் ஏழாம் வீட்டில் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளப்போகிறார்கள்.
மிதுன ராசியில் பயணிக்கும் குரு பகவான், 100 ஆண்டுகளுக்கு பின் சமசப்தக ராஜயோகத்தை உருவாக்குகிறார். இந்த யோகம் புத்தாண்டு ஆரம்பித்து 12 நாட்கள் வரை இருக்கும்.
இந்த மாற்றத்தை நாம் 12 ராசிகளிலும் பார்க்கலாம். அதே சமயம், குறிப்பிட்ட ராசிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கையில், தொழில் வளர்ச்சி, வணிக வெற்றி, ஆரோக்கியம், கல்வி மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியும் நடக்கவுள்ளது.

அந்த வகையில், 100 ஆண்டுகளுக்கு பின் வரும் சமசப்தக ராஜயோகத்தினால் அதிர்ஷ்டத்தை பக்கத்தில் பார்க்கப்போகும் ராசியினர் யார் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.
மேஷம் ராசியில் பிறந்தவர்கள்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன்- குரு உருவாக்கும் சமசப்தக ராஜயோகத்தினால் பல நாட்களாக அடைத்து கிடந்த அதிர்ஷ்ட கதவுகள் திறக்கப்போகிறது. இவர்கள் வழக்கத்திற்கு மாறாக அதிர்ஷ்டமாக உணர்வார்கள். கால இலட்சியத்தை புரிந்து கொண்டு புத்தாண்டில், துணிச்சலான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். பதற்றம் இல்லாமல் இவர்கள் இருக்கும் பொழுது புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

சிம்ம ராசியில் பிறந்தவர்கள்
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு புத்தாண்டில் பல துறைகளில் சாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். கடந்த கால கடன் பிரச்சினைகளை இந்த காலப்பகுதியில் சரிச் செய்யப்படும். மகிழ்ச்சியாக உணர்வதற்கான சந்தரப்பம் உருவாகும். இவ்வளவு நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் தடம் தெரியாமல் மறைந்து போகும். உங்களுக்கு மேல் உள்ள அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.
துலாம் ராசியில் பிறந்தவர்கள்
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு ராஜயோகத்தினால் ஆடம்பரம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்கும். மன அழுத்தங்கள் குறைந்து நிம்மதியான வாழ்க்கை வாழ்வீர்கள். முயற்சிகள் செய்து கொண்டிருப்பவர்களாக இருந்தால், உங்களுக்கு இந்த காலப்பகுதியில் வெற்றி கிடைக்கும். திருமணம் செய்யாதவர்களுக்கு வரன்கள் தேடி வரும்.
