ஜோதிடத்தின்படி தை மாதத்தின் தொடக்கத்தில் இரு கிரகங்கள் நேருக்கு நேர் சந்திக்கும். ஜோதிடத்தின்படி இந்த இரண்டு கிரகங்களும் எதிரி கிரகங்களாக அறியப்படுகின்றன.
இதன் காரணமாக இந்த கிரகங்களின் சந்திப்பு சுக்கிரன் செவ்வாய் போர் என்று அழைக்கப்படுகிறது. பஞ்சாங்கத்தின்படி இந்த போரானது ஜனவரி 6ஆம் தேதி காலை 8:19 மணிக்கு தொடங்கி, ஜனவரி 10ஆம் தேதி காலை 9:13 மணிக்கு முடிவடைய இருக்கிறது.
இதன்படி பார்த்தால் சுமார் 4 நாட்கள் இந்த சண்டை நீடிக்கும். இந்த கிரகப் போரின் போது 4 ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த ராசிகள் பற்றி பார்க்கலாம்.

மேஷம்
- ஜனவரியின் முதல் 10 நாட்கள் மேஷ ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- சுக்கிரன் மற்றும் செவ்வாயின் எதிர்மறையான பலன்கள் காரணமாக மன அழுத்தம் மற்றும் கோபம் அதிகரிக்கக்கூடும்.
- சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும்.
- இந்த நேரத்தில் பொறுமையை கடைப்பிடிப்பது அவசர முடிவுகளை தவிர்ப்பது மிகவும் முக்கியம்.
- உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
ரிஷபம்
- புத்தாண்டின் முதல் பத்து நாட்கள் ரிஷப ராசிக்காரர்களுக்கு கட்டுப்பாடும், எச்சரிக்கையும் தேவைப்படும்.
- குடும்ப விஷயங்களில் பதற்றம் அதிகரிக்கலாம்.
- நிதியில் ஏற்ற இறக்கமாக உணருவீர்கள்.
- விமர்சனங்களை பொறுத்துக் கொள்ள முடியாமல் போகலாம்.
- யார் என்ன சொன்னாலும் சொல்லடும் என நினைத்து கோபத்தை கட்டுப்படுத்தலாம்.
- தியானம், யோகா, பொழுதுபோக்கு நடவடிக்கைகள், உடற்பயிற்சி இவற்றை பின்பற்றுவது அவசியம்.
துலாம்
- துலாம் ராசிக்காரர்களுக்கு முதல் 10 நாட்களுக்கும் மிக கவனம் தேவை.
- குடும்பம் அல்லது தொழில்களில் சிக்கல்கள் ஏற்படலாம்.
- சட்ட ரிதியான விடயங்களை மேற்கொள்ளும் போது எச்சரிக்கை தேவை.
- குடும்பத்திலும், உறவினர்களிடமும் நல்லிணக்கத்தை பேண வேண்டும்.
- வார்த்தைகளில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
விருச்சிகம்
- விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மன அழுத்தம் நிறைந்ததாகவும், அதிக பதட்டம் நிறைந்ததாகவும் காணப்படும்.
- வேலை அழுத்தம் மற்றும் பொறுப்புகள் காரணமாக மனசோர்வு அதிகரிக்கும்.
- தொழில் ரீதியாக அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும்.
- தேவையற்ற வாக்குவாதங்கள், சண்டைகள், மோதல்கள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.
- உடல் ஆரோக்கியத்தை மிக கவனத்துடன் எடுப்பது நல்லது.
