சுக்கிர பகவான் விரைவில் விருச்சிக ராசியில் இருந்து வெளியேறி, தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இது சக்கழரனுடைய இந்த ஆண்டிற்கான கடைசி பெயர்ச்சி எனப்படுகின்றது.

ஜோதிடத்தில் சுக்கிர பகவான் செல்வம், ஆடம்பரம், அழகு, கலை, பொன், பொருள், வசதிகள் ஆகியவற்றின் காரணமாக விளங்குகிறார். 

இந்த பெயர்ச்சி டிசம்பர் 20, 2025 அன்று விருச்சிக ராசியிலிருந்து வெளியேறி குரு பகவானின் சொந்த ராசியான தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

சுமார் 12 மாதங்களுக்குப் பின்னர் குருவின் ராசிக்குள் சுக்கிரன் நுழைவது ஜோதிட ரீதியாக அதிர்ஷ்டமாக பார்க்கப்டுகின்றது. எனவே இந்த பெயர்ச்சி மூலம் அதிர்ஷ்டம் கொண்ட ராசிகள் யார் என்பதை பார்க்கலாம். 

2025 இன் கடைசி சுக்கிர பெயர்ச்சி - வெற்றியை தன்வசப்படுத்தும் 4 ராசிகள் | 2025 Last Sukra Peyarchi Which Zodiac Get Money

மேஷம்

  • மேஷ ராசியின் ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிர பகவான் சஞ்சரிக்க இருக்கிறார்.
  • இது மிகவும் அனுகூலமான பெயர்ச்சியாக கருதப்படுகின்றது. 
  • இந்த பெயர்ச்சியில் உங்களுக்கு அதிர்ஷ்டமும், செல்வமும் கூடும்.
  • எந்த வேலையிலும் வெற்றி கிடைக்கும். 
  • உங்கள் வாழ்க்கையில் புதிய திருப்பம் கிடைக்கும். 
  • உங்கள் ராசிக்கு வேலை, தொழில் விரிவாக்கம், உயர்கல்வி ஆகியவை கிடைக்கும். 
  • உறவுகளுக்கு இடையில் காதல் அதிகரிக்கும். 

மிதுனம்

  • மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவான் ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.
  • இந்த காலகட்டத்தில் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். 
  • திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். 
  • திருமணமானவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 
  • தொழில் மற்றும் முதலீடுகளின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். 
  • தொழிலுக்கான பயணம் லாபம் பெறும். 
  • நிதி நிலைமை எதிர்பாராத வகையில் மேம்படும். இருப்பினும் அதிகப்படியான செலவுகளை தவிர்ப்பது நல்லது.

சிம்மம்

  • சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவான் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்க இருக்கிறார்.
  • இதன் காரணமாக சிம்ம ராசிக்காரர்கள் வேலையிலும், தொழிலிலும் புதிய உச்சங்களைத் தொடுவீர்கள்.
  • எதிர்பாராத பதவி உயர்வு, வருமானத்தில் திடீர் அதிகரிப்பு, புதிய ஒப்பந்தங்கள் ஆகியவை கிடைக்கும்.
  • ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்.
  • கலைத்திறன் மற்றும் படைப்புத்திறன் மேம்படும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
  • ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.

தனுசு

  • தனுசு ராசியின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் சுக்கிர பகவான் நுழைவது மிகவும் அதிர்ஷ்டகரமானதாக பார்க்கப்படுகிறது.
  • இதன் காரணமாக தனுசு ராசிக்காரர்கள் நல்ல சூழலை அனுபவிப்பார்கள்.
  • இந்த காலகட்டத்தில் உங்கள் பண வரவு பெருகும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களின் கனவு நிறைவேறும்.
  • வெளிநாடு செல்ல நினைப்பவர்களின் ஆசைகள் ஈடேறும்.
  • புதிய தொடக்கங்களுக்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை ஆகியவற்றில் திருப்தியை காண்பீர்கள்.
  • முதலீடு சார்ந்து நீங்கள் எடுக்கும் அனைத்து விஷயங்களும் வெற்றி பெறும்.
  • வீடு, மனை, நிலம், தங்கம், வெள்ளி, அசையா சொத்துக்கள் போன்ற நல்ல திட்டங்களில் முதலீடு செய்வீர்கள்.