2026 ம் ஆண்டு கர்ம வினைகள் விலகி குறிப்பிட்ட சில ராசிகளுக்கு நல்ல வளமான எதிர்காலத்தை சனிபெயர்ச்சி உருவாக்கப்போகின்றது. அது எந்த ராசிகளுக்கு என்பதையும் சனிபெயர்ச்சியையும் பார்க்கலாம்.
வரும் புத்தாண்டில் சனி பெயர்ச்சி இருக்கும். சனி பகவான் நாம் செய்யும் கரும வினைக்கு ஏற்ப நமக்கு பலனை தரக்கூடியவர் என்பது தெரியும். அது நன்மையாக இருந்தாலும் சரி தீமையாக இருந்தாலும் சரி.
கடந்த நவம்பர் 28, 2025 அன்று மீன ராசிக்குள் சனி நேரடியாகப் பயணம் செய்யத் தொடங்கினார்.
வரும் 2026 ஆம் ஆண்டின் தொடக்கம் முழுவதும் மீன ராசியில் சனி நேரடியாகப் பயணிப்பார், பின்னர் ஜூலை 27, 2026 அன்று மீன ராசியில இருந்தப்படியே வக்கிரமாக மாறுவார்.
அதன் பிறகு, டிசம்பர் 11, 2026 அன்று மீண்டும் மீன ராசியில் நேரடியாகப் பயணிக்கத் தொடங்குவார். இதுவே 2026 இற்கான சனிப்பெயர்ச்சியாகும். ஆனால் இதன் மூலம் ஜாக்பட் அடிக்கும் ராசிகளும் உள்ளன.

துலாம்
- 2026 ஆம் ஆண்டில் சனி துலாம் ராசிக்காரர்களுக்கு ஆறாவது வீடான மீனத்தில் பெயர்ச்சி அடைகிறது. இதனால் சேவை, வேலைவாய்ப்பு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் அதிகரிக்கும் எனப்படுகின்றது.
- இதற்காக நீங்கள் பொறுபில்லாமல் இருக்க கூடாது எல்லாவற்றையும் பொறுப்புடன் அணுக வேண்டும்.
- எட்டாவது வீட்டில் சனியின் மூன்றாவது பார்வை இருக்கிறது.
- இதனால் எதிர்பாராத செலவுகள், மன அழுத்தம் மற்றும் மறைக்கப்பட்ட கவலைகளுக்கு வழிவகுக்கும் எனப்படுகின்றது.
- பன்னிரண்டாவது வீட்டில் அதன் ஏழாவது பார்வை.
- இதனால் தூக்கம், பயணம் மற்றும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டியிருக்கும்.
- மூன்றாவது வீட்டில் பத்தாவது பார்வை தைரியத்தை அதிகரிக்கும் ஆனால் பொறுமை கடைபிடிப்பது அவசியம்.
விருச்சிகம்
- 2026 ஆம் ஆண்டில், விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி ஐந்தாவது வீட்டில் பயணிக்கும்.
- இதனால் கல்வி, காதல் மற்றும் குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் நன்மை உண்டாகும்.
- எதிலும் சிந்தனைமிக்க முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்.
- ஏழாவது வீட்டில் சனியின் மூன்றாவது பார்வை இருக்கும். இது உறவுகளுடன் பந்தத்தை சோதிக்கும்.
- பதினொன்றாவது வீட்டில் ஏழாவது பார்வை இருக்கும். இதனால் படிப்படியாக நட்பு மற்றும் பணவரவு மேம்படும்.
- இரண்டாவது வீட்டில் பத்தாவது பார்வை இருக்கும் இதனால் நிதி மற்றும் குடும்ப விஷயங்களில் பொறுப்பு அதிகரிக்கும்.
தனுசு
- 2026 ஆம் ஆண்டில், தனுசு ராசிக்காரர்கள் மீன ராசியில் சனியின் நான்காவது வீட்டில் பெயர்ச்சி இடம்பெறும். இதனால் வீடு, நிலம் மற்றும் மன அமைதி தொடர்பான விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
- ஆறாவது வீட்டில் சனியின் மூன்றாவது பார்வை இடம்பெறும். இதனால் வேலை மற்றும் ஆரோக்கியத்தில் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
- பத்தாவது வீட்டில் சனியின் ஏழாவது பார்வை இருக்கும். இதனால் உங்கள் தொழில் பொறுப்புகளை அதிகரிக்கும் மற்றும் மேலதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பை சோதிக்க நேரிடும்.
- லக்னத்தில் பத்தாவது பார்வை இருக்கும். இதனால் தன்னம்பிக்கையில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.
மகரம்
- 2026 ஆம் ஆண்டில், மகர ராசிக்காரர்களுக்கு சனி மீன ராசியின் மூன்றாவது வீட்டில் பயணிப்பார். இதனால் கடின உழைப்பு, தைரியம் மற்றும் சிறிய முயற்சிகள் முக்கியத்துவம் வேண்டும்.
- ஐந்தாவது வீட்டில் சனியின் மூன்றாவது பார்வை இருக்கும். இதனால் படிப்பு, அன்பு மற்றும் குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் பொறுமை தேவை.
- ஒன்பதாவது வீட்டில் சனியின் ஏழாவது பார்வை இருக்கும். எனவே அதிர்ஷ்டத்தை நம்புவதற்குப் பதிலாக தொடர்ந்து முயற்சி தேவை.
- பன்னிரண்டாவது வீட்டில் பத்தாவது பார்வை இருக்கும். இதனால் செலவுகள், பயணம் மற்றும் தனிமை உணர்வுகளை அதிகரிக்கக்கூடும்.
